ஐப்பசியில் இரு ஏகாதசி திதிகள்! திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனத்தில் தரிசிக்க இத்தனை மணி நேரமா?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 23 தங்குமிடங்களும் நிரம்பி இருந்தன.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகைக்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாம். நவம்பர் 1 ஆம் தேதி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தீபாவளியையொட்டி புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நவம்பர் 12 ஆம் தேதி 61,446 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 21,374 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 3.81 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்களில் 23 நிரம்பியிருந்தன.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-4 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
நவம்பர் 11 ஆம் தேதி 73,917 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 25,161 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். உண்டியல் காணிக்கை 4.82 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 6 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்களில் ஒன்று மட்டும் நிரம்பியிருந்தது.
திருமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திருமலையில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் ஆக்ஸிஜன் அளவும் திருமலையில் குறைவாக இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் யாரும் நடைபாதை வழியாக திருப்பதிக்கு நடந்து வர வேண்டாம் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி, அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications