காதலுக்கு எதிர்ப்பு.. செல்பி வீடியோவில் மனவேதனையை பகிர்ந்த ஜோடி.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செல்பி வீடியோவில் வேதனையை பகிர்ந்த ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை

    திருப்பதி: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

    திருப்பதி மாவட்டம் மொரவப்பள்ளியை சேர்ந்த தனஞ்செயலு, காளகஸ்தி சேர்ந்த பல்லவி ஆகியோர் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரண்டு பேரும் தங்கள் பெற்றோரிடம் காதலை தெரிவித்து சம்மதம் கேட்டனர்.

    மனவேதனை

    மனவேதனை

    ஆனால் பெற்றோர்கள் மட்டுமே அல்லாது உறவினர்களும் அவர்களுடைய திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
    இதனால் மனவேதனை அடைந்த தனஞ்செயலு, பல்லவி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டனர்.

    மனநிலை

    மனநிலை

    இதையடுத்து தங்களுடைய காதல், ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ இயலாத தங்களது மனநிலை ஆகியவற்றை விளக்கி செல்பி வீடியோவில் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    கடைசி வீடியோ

    கடைசி வீடியோ

    அந்த வீடியோவில் அவர்கள் கூறுகையில், அம்மா, அப்பா ஆகியோருக்கு சென்று வருகிறோம். இதுதான் எங்களுடைய கடைசி வீடியோ. நானும் நான் விரும்பிய பெண்ணும் தற்கொலை செய்து கொள்கிறோம். காதலர்களை பிரிக்காதீர் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மொரவப்பள்ளி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

    விசாரணை

    விசாரணை

    தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் உடல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+