திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடுகள்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க தமிழகம் கர்நாடகா ஆந்திரா கேரளா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
தற்போது ஓமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் நிலையில் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் இதர வழியாக திருமலைக்கு வருவோர் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முன்பு மற்றும் பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வந்து அதிகாரிகளுடன் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா நெகட்டிவ், மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்குச் செல்லவும் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும் எனவே அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும் ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இலவச தரிசன டோக்கன்
பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தவிர 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் விநியோகிக்கவும் திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

அலிபிரி சோதனை சாவடி
கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் ஆந்திரா தெலுங்கான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆன்லைன் அல்லது நேரடியாக இலவச தரிசன டோக்கன் பெறும் பக்தர்கள் மேற்கூறியபடி தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை பரிசோதனை சான்று வழங்க வேண்டும் இல்லையேல் அவர்கள் அறிகுறி சோதனைச் சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications