Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவில் பிள்ளைகளை இழந்து.. திருப்பதியில் மனைவியை இழந்துவிட்டேன்.. சேலம் பெண்ணின் கணவர் கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது கணவர் கண்ணீருடன் பேசியுள்ளது காண்போரை கலங்க வைத்துள்ளது.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதியில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

tirupati stampede salem

இந்நிலையில் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 ஆம் தேதி சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 1.20 லட்சம் இலவச தரிசன டோக்கன் இன்று காலை 5 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், ஸ்ரீநிவாச வளாகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதற்காக நேற்றே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பைராகி பட்டேடா பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களை வரிசையில் செல்ல போலீசார் அனுமதித்த போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்தனர்.

அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாடின் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

tirupati stampede salem

இந்நிலையில், பலியான சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவின் கணவர் கிருஷ்ணன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். "மதியம் 3.15 மணிக்கு வந்தோம். மாலை 6 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் எனக் கூறினார்கள். அந்த இடத்திற்குச் சென்றோம். 6 மணியளவில் கூட்டம் அதிகமாகி, ஓடியதில் கீழே போட்டு மிதித்துவிட்டனர். அதில் இடுப்பு ஒடிந்து உயிரிழந்துவிட்டார்.

சேலம் மேச்சேரியில் இருந்து 10 பேர் வந்தோம்.. இங்கு வந்து மனைவியை இழந்துவிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியல.. கொரோனா வந்து பிள்ளைகளை இழந்துவிட்டோம். இப்போது மனைவியையும் இழந்துவிட்டேன்" என மனைவியை பறிகொடுத்தவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+