இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சேராஜபக்சே திருப்பதியில் தரிசனம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜயதாச ராஜபக்சேராஜபக்சே, ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தரிசனம் செய்தார். இலங்கையில் தற்போது அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்சே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு ஒன்றின் பெயரில் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்த நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17- அக்டோபர் 16-க்கு இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

srilanka Tirupati


அதேநேரத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவை எதிர்கொண்ட நிலையில் தற்போதைய அமைச்சரான விஜயதாச ராஜபக்சே, தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை தாம் மேற்கொண்டிருப்பதாகவும் விஜயதாச ராஜபக்சே கூறி வருகிறார். இலங்கையில் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் விஜயதாசே ராஜபக்சே கூறி வருகிறார்.

srilanka Tirupati


இந்த பின்னணியில் இலங்கை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே இன்று ஆந்திரா மாநிலம் திருப்பதி வருகை தந்தார். திருப்பதி கோவிலில் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார் விஜயதாச ராஜபக்சே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+