மாமாவைக் கூப்பிட்டு திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவராக்கிய ஜெகன் மோகன் ரெட்டி!
Recommended Video
திருப்பதி: ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா சுப்பா ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், செல்வம் கொழிக்கும் திருப்பதியின் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஏதுவாகப் புதிய குழு ஏற்படுத்தப்படும். இந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்ற பின்னும் அப்படி தான் நடந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்ததாகச் செய்திகள் வெளியானது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி சுதாகர் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தை தேவஸ்தான நிர்வாகத்திடம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, உலக புகழ்மிக்க திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் புதிய தலைவராக சுப்பா ரெட்டியை நியமிக்கப்பட்டுள்ளார். ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மிக முக்கிய நிர்வாகியாக வலம் வந்த முதல்வர் ஜெகன் மோகனின் மாமா முறையான சுப்பா ரெட்டி க்கு, மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கப்படாத நிலையில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த, கோப்புகளை ஜெகன் மோகன் ரெட்டி, சிறப்பு தலைமை செயலாளர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார். இதன்படி இன்று முதல் சுப்பா ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி அமைச்சரவை தரவரிசையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட பதவி ஆகும்.
அமைச்சர் பதவி தராததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரோஜாவுக்கு மாநில தொழிற்சாலை கட்டமைப்பு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதே போல், மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படாததால், ஒதுங்கி இருந்த சுப்பா ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் தரப்பட்டுள்ளது. அதே சமயம், ஜாதி அடிப்படையில், 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்வதில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ராஜதந்திரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications