ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. திருப்பதி செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷல் பஸ் ரெடி
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு விரைவு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். வழக்கமாக புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதிக்கு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ள தகவல்:- இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications