திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பதி அருகே 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து! விபத்தில் சிக்கி இருளில் அலறிய திருமண கோஷ்டி!

Google Oneindia Tamil News

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 50 அடி பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Recommended Video

    50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து 7 பேர் பரிதாப பலி.. 45 பேர் காயம்!

    45 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிகழ்வு திருப்பதி சுற்று வட்டார மக்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.

    ஏழுமலையான் பக்தர்கள் ஏப்.1 முதல் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் - திருப்பதி தேவஸ்தானம் அனுமதி ஏழுமலையான் பக்தர்கள் ஏப்.1 முதல் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் - திருப்பதி தேவஸ்தானம் அனுமதி

    மலைப்பாதை

    மலைப்பாதை

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய தனியார் பேருந்தில் 52 பேர் புறப்பட்டு சென்றனர். இந்த பேருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு பாக்கராப்பேட்டை மலைப்பாதை வழியாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பேருந்து அதிவேகம் காரணமாக கட்டுபாட்டை இழந்த பேருந்து வளைவில் சாலையோரம் உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

     காவல்துறையினர்

    காவல்துறையினர்

    இதனை கவனித்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு மற்றும் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு சிறப்புக் தனிப்படை போலீசார் மற்றும் தீயணைப்புப் வீரர்கள் மூலம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

    50 அடி ஆழம்

    50 அடி ஆழம்

    இருட்டில் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இருப்பவர்களின் அழுகை மட்டுமே கேட்டது, சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததால் எதையும் பார்க்க முடியாத நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு கயிறு கட்டி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருள் சூழ்ந்த இடத்தில் வனப்பகுதியில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து, காயமடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் பலரது உயிரைக் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    8 பேர் உயிரிழப்பு

    8 பேர் உயிரிழப்பு

    ஒட்டு மொத்த போலீசாரும் , தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை உரிய நேரத்தில் மீட்டனர். இருபினும் இந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்து திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு சிறப்பான மருத்துவ சேவைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    English summary
    Tirupati near Bus Accident: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 50 அடி பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X