திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்றில் முதல் முறை! திருப்பதி கோவில் உண்டியலில் குவிந்த அதிகபட்ச காணிக்கை! எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மே மாதம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் எனக்கூறுவது உண்டு. இதன் பின்னணியில் திருப்பதி ஏழுமழையான் கோவிலை தான் வைத்து தான் கூறுகின்றனர். மேலும் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார்.

இதனால் தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை..அள்ளித்தந்த நெல்லை பக்தர்கள் அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை..அள்ளித்தந்த நெல்லை பக்தர்கள்

பக்தர்கள் ஆர்வம்

பக்தர்கள் ஆர்வம்

2021ல் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கி வேகமெடுத்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்தபோது கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்க துவங்கினர். தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தினமும் கோவிலில் ஆர்வமாக குவிந்து வருகின்றனர். குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேர காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காணிக்கை

காணிக்கை

இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்

வரலாற்றில் முதல் முறையாக

வரலாற்றில் முதல் முறையாக

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையின் காரணமான ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.ஒரு மாதத்தில் ரூ.130.29 கோடி என்பது திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

 22.62 லட்சம் பக்தர்கள்

22.62 லட்சம் பக்தர்கள்

இதுபற்றி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறுகையில், ‛‛மே மாதத்தில் மட்டும் 22.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1.86 கோடி லட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடிகாணிக்கை செய்துள்ளனர். தினசரி உண்டியல் வருமானம் என்பது சராசரியாக ரூ. 4 கோடியாக இருக்கும். பக்தர்கள் அதிகம் வரும்போது இது ரூ.5 கோடியாக அதிகரிக்கும்'' என்றார்.

English summary
A record Rs.130.29 crore collections from hundi were received during May this year at the Tirumala Sri Venkateswara Swami temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X