இதுதான் பெரிய ஷாக்.. அயோத்தி ராமர் கோவிலுக்கு டன் கணக்கில் போன.. மாட்டு கொழுப்பு திருப்பதி லட்டு!
திருப்பதி: திருப்பதி கோவில் லட்டில் மாட்டுக்கொழுப்பு இருப்பதாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த லட்டுதான் அயோத்தி ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டை' விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டது.
திருப்பதி கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இவற்றில் "வெளிப்புற" கொழுப்பு இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும். இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
கொழுப்பில் இருக்கும் ஷாக்கிங் பொருட்கள்: இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு. சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது. பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.
அதிர்ச்சி சம்பவம்: ஆம் இந்த லட்டுதான் அயோத்தி ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டை' விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது 'பிரான் பிரதிஷ்டை' விழாவிற்காக 1 லட்சம் லட்டுகளை தயார் செய்து அனுப்பியது.
இது கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டது. மக்களுக்கு அங்கே இந்த பிரசாதம் வழங்கப்பட்டது. அரசியல்வாதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில்தான் மாட்டுக்கொழுப்பு இருந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு புகார்: ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications