பாகிஸ்தான் அத்துமீறல்! ஓங்கி அடிக்கும் இந்தியா! திருமலை திருப்பதியில் "ஆக்டோபஸ்"
திருப்பதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே ஆக்டோபஸ் படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

பஹல்காமில் 26 அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்றதற்கு பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.
ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ தீவிரவாதிகளை அழித்ததற்காக இந்தியா மீது போர் தொடுத்து வருகிறது. நம் நாட்டு படையின் திறமை தெரியாமல் சாதாரண ஆயுதங்களை கொண்டு எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
தாக்குதல்
கடந்த வியாழக்கிழமை இரவு முதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் சேதாரம் என்னவோ பாகிஸ்தானுக்குத்தான். இந்தியா தரப்பில் எந்த இழப்பும் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்தது. போரை கைவிடுமாறு பாகிஸ்தானுக்கு சில உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
பாகிஸ்தான்
ஆனாலும் பாகிஸ்தான் அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக டிரோன்களை செலுத்திக் கொண்டே இருந்தது. நம் வான் பாதுகாப்பு கவசங்களும் அவற்றை துவம்சம் செய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் எல்லைகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது.
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு
இன்று அதிகாலையும் இதே நிலை தான். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை இந்தியா அழித்தது. இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜரூராக உள்ளது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆக்டோபஸ் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆக்டோபஸ்
பாதுகாப்பு ஒத்திகையில் ஆக்டோபஸ், காவல்துறை, உளவுத் துறை, பாதுகாப்புத் துறைகள், வெடிகுண்டு தடுப்பு, மோப்ப நாய் படையைச் சேர்ந்த சுமார் 130 பணியாளர்கள் பங்கேற்றனர். மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஏழுமலையான் கோயில், தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் போன்ற நெரிசலான பகுதிகளில் சோதனை நடத்தினர்.
ஒத்திகையின் நோக்கம்
இந்த ஒத்திகையின் நோக்கம் பக்தர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எச்சரிக்கையாகச் செயல்படுவதும் ஆகும். சந்தேகத்துக்கிடமான நபர்கள் விசாரிக்கப்பட்டு அவர்களின் பொருட்கள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஒத்திகை
இந்த பாதுகாப்பு ஒத்திகை குறித்து ஆக்டோபஸ் படை பிரிவின் துணை போலீஸ் எஸ்பி விஜயகுமார் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் படை வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். திருமலையில் உள்ள பக்தர்களின் முழு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். திருமலையில் உள்ள சிஆர்ஓ, மையம் அரசு பஸ் நிலையம், ஏழுமலையான் கோயில், நந்தகம் காட்டேஜ், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆக்டோபஸ் படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து திருமலை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
திருமலை கெஸ்ட் ஹவுஸ்
இது தவிர திருமலையில் உள்ள மடங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் தினமும் ஆய்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார். இதனால் திருப்பதியில் ஆக்டோபஸ் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications