வாணியம்பாடியில் மண்ணில் டக்னு தோன்றிய பன்றி.. குங்குமம், மஞ்சளை பூசி.. வளையத்துள் திருப்பத்தூர் ராஜா
திருப்பத்தூர்: கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம், விஞ்ஞானம் என இந்தியாவின் வளர்ச்சி முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், மாந்திரீகம், நரபலி, சூனியம் என்று இன்னமும் பலர் மூழ்கிபோய் உள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டுபண்ணி வருகிறது. சமீபத்தில் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் மாந்திரீகம், நரபலி குறித்த செய்திகள் பரவிய நிலையில், மீண்டும ஒரு கலக்கம் திருப்பத்தூர் மாவட்டத்தை சூழ்ந்துள்ளது.
தொழிலில் முன்னேற்றமின்மை, வியாபாரத்தில் நஷ்டம் போன்ற காரணமாக விரக்தி, விரைவில் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை போன்ற காரணங்களால், மூடநம்பிக்கையின் பிடியில் சிலர் சிக்கிவிட நேரிடுகிறது. இதனால் ஏற்படும் பயங்கரங்களை யாராலும் கற்பனை செய்தும் பார்க்க முடிவதில்லை.

கேரளாவில் கிலியை கிளப்பி வரும் நரபலி சம்பவங்கள், இப்போது தமிழ்நாட்டிலும் நரபலி துவங்கிவிட்டதோ? என்று அச்சப்படக்கூடிய அளவுக்கு சந்தேகங்கள் வலுவாகி விட்டன..
கோவை ஆண் குழந்தை
கடந்த மாதம் கோவை மாவட்டம், இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஒன்றரை வயதான ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது.. அந்த குழந்தையின் சடலத்தின் பக்கத்தில் மஞ்சள், குங்குமம், ரத்தம், வெட்டப்பட்ட கோழியின் உடல் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தை நரபலி தரப்பட்டதாக கோவை மாவட்டம் முழுவதுமே தகவல் பரவி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
நாமக்கல் - அமாவாசை
இந்த பரபரப்பு அடங்கும் முன்பே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேளுக்குறிச்சி பகுதியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. க.வெள்ளாளப்பட்டியில், வீடு கட்டும் பணிக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த மண்ணுக்கடியில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டிருந்தது.
போலீசார் அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 2 மணிக்கு அந்த பகுதிக்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது.. மகாளய அமாவாசை நாளில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக அந்த பகுதி முழுக்க தகவல் தீயாய் பரவி, அச்சத்தை தந்துவிட்டது நினைவிருக்கலாம்.
திருப்பத்தூர் பள்ளத்தூர்
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலும் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது.. வாணியம்பாடி அருகிலுள்ள பள்ளத்தூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களாகவே வயதானவர்கள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர்.
ஆரோக்கியமாக இருந்தவர்களும் திடீரென இறந்துவிடுவதால், அந்த கிராம மக்கள் கலக்கம் கொண்டனர்.. கிராமத்தில் ஏதோ கெட்ட சக்தி நடமாடுகிறது, வருங்காலத்தில் பெரிதாக ஆபத்து வரப்போகிறது என்றெல்லாம் நினைத்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த திடீர் மரணங்களுக்கெல்லாம் காரணம், அந்த ஊரிலுள்ள மந்திரவாதி ராஜா என்பவர்தான் என்றும் திடமாக நம்புகிறார்கள்..
காரணம், ராஜா என்பவர் அந்த கிராமத்திலுள்ள மாந்தீரிகவாதி.. பில்லி சூனியம் செய்து, பேய் பிசாசுகளை ஓட்டி பூஜைகளை செய்து வருபவராம்..
வாணியம்பாடி மண்ணில் பன்றி
பெரிய பிரச்சினையுடன் யாராவது வந்தால், நரபலி தந்தால் சரியாகிவிடும் என்று கூலாக சொல்லி அனுப்புவாராம் ராஜா.. அதனால்தான் ராஜாவை பார்த்தாலே அந்த ஊர் மக்கள் நடுநடுங்கி போயிருக்கிறார்கள்.. அத்துடன் அவரிடம் எந்த பேச்சையும் வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், கிராமத்துக்கு ஒதுக்குப்புறம் உள்ள தென்னந்தோப்பு கரையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது.. தொடர்ந்து 5 நாட்களாக துர்நாற்றம் வீசியதால் ஒருவேளை நரபலியாக இருக்குமோ? ராஜா யாரையாவது பலி தந்திருப்பாரோ? என்று கிராம மக்கள் மீண்டும் பயந்தார்கள்.. உடனே போலீசுக்கும் தகவல் தந்தார்கள்.
போலீசாரும் பள்ளத்தூருக்கு விரைந்து வந்து, குற்றம் சாட்டப்பட்ட ராஜாவையும் வரவழைத்து தென்னந்தோப்பு கரைக்கு சென்றார்கள்.. அங்கே துர்நாற்றம் வீசிய இடத்தில் குழிதோண்டினர்.. அப்போது திடீரென மண்ணிலிருந்து பன்றி ஒன்று இறந்த நிலையில் தென்பட்டது.. அந்த பன்றிக்கு குங்குமம் மஞ்சள் பூசப்பட்டு, பூஜையும் நடத்தி புதைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மஞ்சள், குங்குமம்
தோண்டப்பட்ட மண்ணில் இறந்த பன்றியை கண்டதுமே பொதுமக்களும், போலீசாரும் அதிர்ந்தனர்.. பிறகு, உடனடியாக தோண்டிய குழியை போலீசார் மூடிவிட்டு, ராஜாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்..
பில்லி சூனியம் எடுப்பதாக சொல்லி மக்களை பயமுறுத்தி வந்த ராஜாவிடம் தற்போது விசாரணையும் நடந்து வருகிறது.. உண்மையிலேயே பன்றியை கொன்று பூஜை செய்தார்களா? எதற்காக பன்றியை கொன்றார்கள்? யாருக்காக கொன்றார்கள்? அல்லது யதேச்சையாக பன்றி இறந்ததா? என்பதெல்லாம் இனிமேல்தான் விசாரணையில் தெரியவரும். ஆனால் ஏற்கனவே பயத்தில் நடுங்கி கிடந்த பள்ளத்தூர் கிராம மக்கள், இந்த சம்பவத்தினால் மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications