திருப்பதி பக்தர்களை ‘மொட்டையடிக்கும்’ புரோக்கர்கள்! லட்சக்கணக்கில் பறிபோன பணம்! தேவஸ்தானம் வார்னிங்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பக்தர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இந்த நிலையில் பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருப்பதி சென்று ஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டும் என்று லட்சக்கணக்கான பக்தர்கள் விரும்புகின்றனர். இலவச தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதே நேரத்தில் விரைவு தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கினாலும் பல பக்தர்களுக்கு கிடைப்பதில்லை. ஆன்லைனில் தரிசன டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

அதே போல அனைத்து சேவா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே புக் செய்யப்படுகிறது. சிலருக்கு அதிர்ஷ்ட குலுக்கல் மூலமும் சேவா டிக்கெட் கிடைக்கும். சுப்ரபாத சேவை தொடங்கி சகஸ்ரநாம தீப அலங்கார சேவை வரைக்கும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும். அதே போல இலவசமாக புக் செய்யும் அங்கபிரதட்சணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என அனைத்திற்குமே ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும். இது தவிர தரிசனத்திற்காக பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைன் மூலமே புக் செய்ய முடியும்.
ஆன்லைன் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் அனைவருக்குமே கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் சிலர் பக்தர்களிடம் பண மோசடி செய்து வருவதாகவும், போலி தரிசன டிக்கெட்டுகளைப் பெற்று ஏமாற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா கூறும் போது," ஆந்திர மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் ஒரு மாணவி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.
அவரிடம் சந்தீப், பவன்குமார் என்ற இருவர் தொடர்பு கொண்டு சுப்ரபாத சேவை, விஐபி தரிசனம், தங்குமிடம் ஆகியவற்றுக்கான டிக்கெட் தருவதாக இரண்டரை லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வசூலித்து மோசடி செய்திருக்கின்றனர். மார்ச் மாதம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மோசடி குறித்து திருமலை காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்திருக்கிறார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு சில புரோக்கர்கள் சாமி தரிசன டிக்கெட் தருவதாக அதிக தொகையை வசூலித்து வருகின்றனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு பக்தர்கள் கண்காணிப்பு குழுவை நியமித்திருக்கிறது. பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பாமல் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவே சாமி தரிசன டிக்கெட் பெற வேண்டும். மேலும் போலி தரிசன டிக்கெட் பெற்று ஏமாற வேண்டாம். பக்தர்கள் தரிசன டிக்கெட் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் சரி பார்ப்பார்கள். அப்போது போலி டிக்கெட் இருந்தால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாது.
புரோக்கர்கள் யாராவது உங்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாகவும், தங்குமிடம் ஏற்படுத்தி தருவதாகவும் சொன்னால் உடனே 0877-2263828 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் ஆதார் கார்டின் அடிப்படையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in என்ற தளம் மூலமாகவே தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். பக்தர்களை போலி டிக்கெட்டுகள் மற்றும் புரோக்கர்களிடமிருந்து பாதுகாக்கவே இந்த முக்கிய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது" என கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications