Tirupati: திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிடப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. திருப்பதிக்கு நினைத்த போதெல்லாம் பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுசு பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம், வெளிநாட்டு கரன்ஸிகள் என ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியதாவது: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி., எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் கோவில்கள் கட்டப்படவுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ. 37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ. 3 கோடி மதிப்பில் ஒண்டிமிட்டாவில் புனித வனம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் டிசம்பர் 10 முதல் ஜனவரி 8 ஆம் வரையிலான 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலமாக 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக டோக்கன் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து முசிவு செய்யும் வகையில் உறுப்பினர்கள், நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழுவினர் வழங்கும் அறிக்கையை பொருத்து வரும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications