Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி கோயிலில் சிலுவை.. ஸ்டிக்கருடன் என்ட்ரி தந்த கார்.. உறைந்து போன பக்தர்கள்.. என்ன நடந்தது?

சிலுவை ஸ்டிக்கருடன் கார் ஒன்று திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தது

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி கோயிலில், சிலுவை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்திருந்த ஒரு காரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. என்ன நடந்தது?

திருப்பதி கோயிலில் சில சமயங்களில் சர்ச்சைகள், அல்லது பரபரப்பு தகவல்கள் வெடிப்பது வழக்கம்.. ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடப்பது வழக்கம்...

இதுபோன்ற உற்சவங்களின்போது, கோயில் கோபுரங்களை சுற்றி லைட்டுகள் வைத்து அலங்கரிப்பார்கள்.. அதுபோன்று அலங்கரிக்கப்படும் லைட்டுகளில் அனுமன், கருடன், பூரண கும்ப கலசம் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிப்பார்கள்..

அப்படித்தான், 2 வருடங்களுக்கு முன்பும் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.. பூரண கும்பம் போலவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.. ஆனால், அந்த அலங்காரம் பார்ப்பதற்கு, சிலுவை போல இருப்பதாக சிலர் சொல்லி உள்ளனர்.

 கும்ப கலசம்

கும்ப கலசம்

"தால பத்ரா நிதி" என்ற நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும், பூரண கும்ப கலசம் என்று கூறி, சிலுவையை மின் அலங்காரம் செய்துள்ளதாக பதிவிட்டு, அந்த போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தனர்.. இந்த பதிவுதான் படுவைரலாகி, கடைசியில் சர்ச்சையாகவும் மாறியது.. தவறாக சித்தரிக்கப்பட்ட இந்த போட்டோவுடன் கூடிய பதிவு, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், புனிதமான கோவிலில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் பக்தர்களிடையே வீண் புரளியை கிளப்பி வருவதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் ஸ்டேஷனில் புகார் தந்தனர்..

சிலுவை

சிலுவை

அந்த புகாரின் பேரில் போலீசாரும் பூரண கும்ப கலசத்தை சிலுவையாக இருப்பதாக கூறி, தாலா பத்ரா நிதி பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர்... இதுபோல் சர்ச்சைகள் வந்ததால், அப்போதுமுதல், தேவஸ்தான நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் அனைத்திலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.. எந்தவிதமான மோதல்கள், சலசலப்புகள் வந்துவிடாதவாறு, விழிப்புடனும் செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில், இன்னொரு சலசலப்பு நேற்று எழுந்தது..

 தேவஸ்தானம்

தேவஸ்தானம்

இந்த கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வருவார்கள்.. அப்படி தரிசனத்திற்கு வரும் வாகனங்களில், மாற்று மதத்தினர் சின்னம் பொருத்திய வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை... இதற்காக அலிபிரி செக்போஸ்ட்டில். வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்தபிறகுதான், திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது... இந்த நிலையில் நேற்று தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று அலிபிரி செக்போஸ்ட்டுக்கு வந்துள்ளது..

ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

அந்த காரில் சிலுவை ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.. ஆனால், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அந்த ஸ்டிக்கரை கவனிக்கவில்லை.. காரை முழுமையாக சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுமதித்தனர். அந்த கார் திருமலையில் உள்ள எஸ்எம்சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது... திருமலையில் சிலுவையுடன் கார் நிற்பதை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் பதறிவிட்டனர்.

சிலுவை

சிலுவை

அந்த கார் ஓனரை யார் என்பதை தேடிப்பிடித்து, அவரை நேரில் அழைத்து, காரில் ஒட்டப்பட்டு இருந்த சிலுவை ஸ்டிக்கரை உடனடியாக அகற்றினர்... மேலும் மாற்று மதத்தினரின் சின்னங்களை ஒட்டிய வாகனங்களுக்கு திருமலையில் அனுமதி இல்லை என்றும், இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்... அதேபோல, அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி திருமலைக்கு வந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+