இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! திருமலை திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி: திருப்பதியில் இஸ்கான் கோயில் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் விடுதியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உஷார் நிலையில் இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் திருப்பதி, திருமலையில் உள்ள ஹோட்டல்களில் தங்கி சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். தற்போது புரட்டாசி மாதமும் பிரம்மோற்சவ விழாவும் முடிந்துவிட்டன.

எனினும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள இஸ்கான், வராக சுவாமி கோயில்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தெரிகிறது.
ஆனால் திருப்பதியில் வராக சுவாமி கோயில் இல்லை என்பதால் திருப்பதி போலீஸார் இஸ்கான் கோயிலுக்கு சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை வெளியே அனுப்பிவிட்டு கோயில் முழுவதும் சோதனை செய்தனர். அப்போதுதான் அது புரளி என்பது தெரியவந்தது.
இது போல் திருப்பதியில் வெளிநாட்டினர் தங்கும் சில நட்சத்திர விடுதிகளுக்கும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மூலம் வருகிறதாம். இதை யார் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து திருமலை, திருப்பதியில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரவும் பகலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றன. திருமலை முழுவதும் ஆக்டோபஸ் கமாண்டோக்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர்கள் புகைப்படங்கள் மத்திய மாநில போலீஸாருக்கு பகிரப்பட்டுள்ளன. அது போல் திருமலையில் 28 இடங்களில் முக அடையாளம் கண்டறியும் சோதனையும் நடத்தப்படுகிறது. ஸ்ரீவாரி மெட்டு முதல் திருமலை வரை 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications