திருப்பதியில் திடீர் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? 8 இடங்களில் டோக்கன்.. வெளியான தகவல்
திருப்பதி: திருப்பதியில் இன்று திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மூச்சுத்திணறி கீழே விழுந்தனர். இதில் சேலத்தை சேர்ந்த பெண் உள்பட மொத்தம் 6 பேர் பலியான நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது? பக்தர்களின் இறப்புக்கு என்ன காரணம்? என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். அதன்பிறகு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் தான் வைகுண்ட ஏகாதசியையொட்டிதிருப்பதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்கவாசல் என்பது திறந்து இருக்கும். இந்த 10 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் இன்று இரவு திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் மூச்சுத்திணறி கீழே விழுந்தனர். இதில் சேலத்தை சேர்ந்த பெண் பக்தர் மல்லிகா உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் திருப்பதியில் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திருப்பதி வைகுண்ட ஏகாதசியையொட்டி இலவச தரிசன டோக்கன் நாளை அதிகாலை 5 மணி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த இலவச டோக்கன் இருந்தால் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும் ஜனவரி 10 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

இதனால் இலவச டோக்கனை பெற ஏராளமான பக்தர்கள் இன்று இரவே கூடினர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். திருப்பதியில் வெவ்வேறு இடங்களில் 8 கவுண்ட்டர்கள், திருமலையில் ஒரு கவுண்ட்டர் என்று மொத்தம் 9 கவுண்ட்டர்கள் மட்டுமே திறக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி திருப்பதியில் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள விஷ்ணுநிவாசம், பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள சீனிவாசம், அலிபிரி பாலாஜி பஸ் நிலையத்தின் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதி ஜீவகோணா ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, எம்ஆர் பட்டீல் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி, ராமசந்திரா புஷ்கரினி, பைராகிபட்டேடா ராமநாய்டு (மகாத்மா காந்தி) பள்ளி, முனிசிபல் அலுவலகம் அருகே உள்ள இந்திரா மைதானம் உள்ளிட்ட 8 இடங்களில் இலவச டோக்கன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. அப்போது பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பக்தர்கள் அடுத்தடுத்து தவறி கீழே விழுந்து மூச்சுத்திணறி பலியாகி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது .
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications