பல்லடத்தில் ஒரே பரபரப்பு.. கொல்லப்பட்ட குடும்பம் இருந்த மருத்துவமனைக்கு வந்த.. கொலையாளி.. ஷாக்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் மர்மநபர்களால் ஒரு குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட குடும்பம் இருக்கும் மருத்துவமனைக்கே வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடத்தில் நடந்த கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையின் புகைப்படங்கள் இணையம் முழுக்க பதற்றத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது?: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவரின் குடும்பம்தான் மொத்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் வீட்டில் இருந்த போது துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
செந்தில் குமார் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு இவரது வீட்டின் அருக 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது என்று செய்திகள் வந்தன.
இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இடையில் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு தரப்பும் எதிர் எதிரே கடைகள் வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என்கிறார்கள்.
பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. 2வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்து வருகின்றனர். எல்லா குற்றவாளிகளையும் கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
தப்பி ஓட முயற்சி: இந்த நிலையில்தான் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக கைதான செல்லமுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட போது செல்லமுத்து தப்ப முயற்சி செய்துள்ளார்.
மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்துக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனை: இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி செல்லமுத்து கொலை செய்யப்பட்ட குடும்பம் இருக்கும் மருத்துவமனைக்கே வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த செல்லமுத்து, பல்லடம் குடும்பம் இருக்கும் அதேபோல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கே மக்கள் கூடி உள்ளனர். இங்கே பிரச்னையை தவிர்க்கும் விதமாக செல்லமுத்துவை திருப்பூர் கொண்டு செல்ல போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் காரணமாக பல்லடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என்று கூறியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications