இரவில் வரும்போது துரத்தி துரத்தி குரைத்த நாய்கள்.. விஷம் வைத்து தீர்த்துக்கட்டிய மீன்வியாபாரி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    15 தெரு நாய்களை மீன் வியாபாரி விஷம் வைத்து கொலை- வீடியோ

    திருப்பூர்: திருப்பூரில் தன்னை பார்த்து குரைத்த 15 தெரு நாய்களை மீன்வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெரு நாய்களை கொல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் மாடியில் இருந்து நாயை தூக்கிப்போட்டு கொன்றனர்.

    இந்த வீடியோ வெளியானதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் ஒரு நபர் நாயின் கால்களை கட்டிப்போட்டு சாக்கடையில் வீசி கொன்றார்.

    திருப்பூரில் அதிர்ச்சி

    திருப்பூரில் அதிர்ச்சி

    இந்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடினர். இந்நிலையில் தன்னை பார்த்து குரைத்த நாய்களை மீன் வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீன்வியாபாரம்

    மீன்வியாபாரம்

    திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் வீதியை சேர்ந்தவர் கோபால். இவர் மீன் பிடித்து கடைகளுக்கு விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

    குரைத்த நாய்கள்

    குரைத்த நாய்கள்

    இந்நிலையில் இரவு நேரங்களில் இவர் மீன்பிடித்துவிட்டு தெருவில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது வீடு மற்றும் தெருக்களில் உள்ள நாய்கள் இவரைப் பார்த்து குரைத்து வருவதால் கோபால் ஆத்திரமடைந்தார்.

    விஷம் வைத்து கொலை

    விஷம் வைத்து கொலை

    இதனால் தன்னை பார்த்து குறைக்கும் நாய்களை கொல்ல முடிவு செய்தார் கோபால். மீன் பிடிக்க உபயோகப்படுத்தப்படும் மருந்தை உணவில் கலந்து தெருக்களில் உள்ள நாய்களுக்கு வைத்துள்ளார். இதில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 15 நாய்கள் கொல்லப்பட்டுள்ளன.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்நிலையில் கொங்கணகிரி இரண்டாம் விதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நாய்கள் இறந்ததால் மீன் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். குரைத்த நாய்களை மீன் வியாபாரி ஒருவர் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+