அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள்
திருப்பூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அவிநாசி (தனி) தொகுதி பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், கடும் அதிருப்தியில் இருக்கிறார் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான தனபால்.
அதிமுகவின் மிக மூத்த நிர்வாகியான தனபால் கடந்த காலங்களில் அமைச்சர், சபாநாயகர் என முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். வழக்கம்போல் இந்தத் தேர்தலிலும், அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், தொகுதியை கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்குத் தாரை வார்த்ததோடு, தனபாலுக்கு கல்தாவும் கொடுத்துவிட்டது கட்சித் தலைமை என்று கொதிக்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவிநாசி தொகுதியில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தனபாலுக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிற அவருடைய ஆதரவாளர்கள், இந்தத் தேர்தலில் கூட்டணி உறுதியாவதற்கு முன்பே பா.ஜ.க.வின் எல்லை மீறல் அதிகரித்துவிட்டது. எடப்பாடியாரும் அமித்ஷா இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார். அதனால், தொகுதி ஒதுக்கீட்டிலும் பா.ஜ.க. தலையீடு அளவுக்கு அதிகமாக இருந்தது.
பாஜகவின் சுருக்கு வலை
குறிப்பாக, அ.தி.மு.க.வுக்கு எளிதாக வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும் பல தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு தாரை வார்த்திருக்கிறார் எடப்பாடி. அவற்றில் ஒன்றுதான் அவிநாசி தொகுதியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அரசியல் பழகிய மூத்த அரசியல்வாதியான தனபாலுக்கு, எடப்பாடியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. சில இடங்களில் அதை வெளிப்படையாகக் காட்டவும் ஆரம்பித்தார். ஆனாலும் கூட அவரது கருத்துக்கு மதிப்பளிக்காமல் சர்வாதிகாரி போல் நடந்துகொண்டார் எடப்பாடி.
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய சூழலில்தான், அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார் அண்ணன் தனபால். வெளியில் தெரியாத தனது மற்றொரு முகத்தை அறிந்தவர்கள் யாரும் கட்சிக்குள் இருப்பது தனக்கு ஆபத்து என நினைக்கிறார் எடப்பாடி. அண்ணனையும் அப்படித்தான் கருதுகிறார். அதனால்தான் தனபாலுக்கு கல்தா கொடுக்கிறேன்' என்ற பெயரில், அண்ணனுக்கு துரோகம் இழைத்து, பா.ஜ.க-வின் சுருக்கு வலையில் சிக்கியிருக்கிறார்'' என்று சஸ்பென்ஸ் வைத்தனர்.
மாநில அரசியலுக்கு குறி
பாஜக கட்சியின் சீனியர் நிர்வாகிகளிடையே பேசியபோது, "அருந்ததியர் மக்கள் அதிகம் வாழும் அவிநாசி தொகுதியில் தனபாலுக்கு இன்றளவும் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. அந்த மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் நாட்டின் முதல் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அந்தத் தொகுதியில் களமிறக்கி, மாநில அரசியலில் பங்காற்ற வைக்க வேண்டும் எனக் கட்சி விரும்புகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எடப்பாடியுடன் டபுள் இன்ஜின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கிறது. அப்போது, எல்.முருகனுக்கு அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவி கேட்கும் வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது. அதற்கான நகர்வில்தான் அமித் ஷா-வும் தீவிரமாக இருக்கிறார். அ.தி.மு.க-வினர் மட்டும் உள்ளடி துரோகம் செய்யாமல் இருந்தால், எங்களுக்கு வெற்றி எளிமையாக அமைந்துவிடும்'' என்கின்றனர்.
நடப்பது நடக்கட்டும்
அ.தி.மு.க-வில் சீட் ஒதுக்கப்படாத தால் அதிருப்தியில் இருந்துவரும், தனபாலிடம் பேசியபோது, "அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான், எதிர்ப்பாளர்களைப் பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தேன்.
இப்படி இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு உதவியாக இருந்து காப்பாற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை. விருப்ப மனு அளித்திருந்த என்னிடம், 'தேர்தலில் போட்டியிட விருப்பமா, இல்லையா?' என்றுகூட யாரும் கேட்கவில்லை. பா.ஜ.க-வுக்கு அவிநாசி தொகுதியைக் கொடுத்திருக்கிறார்கள். நடப்பது நடக்கட்டும்'' என்றார் மனவேதனையுடன்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications