குடிகார ஆசாமி செஞ்ச வேலை இருக்கே.. எம்மாடி.. சில்லறை இல்லைன்னு சொன்னது குத்தமா? பதற வைத்த வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் சிகரெட் வாங்க வந்த போதை ஆசாமி, 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறை தராததால் இரவில் வந்து கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை ஆசாமிகள் அட்டூழியம் திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பது ஒருபுறம் எனில், குடித்துவிட்டு சாலைகளில் எமன்களாக வலம் வருகிறார்கள். சாலைகளில் இவர்கள் செய்யும் தகராறுகள் மிக அதிகம். சனிக்கிழமை சம்பள நாள் என்பதாலு அன்று இரவும் அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அன்றும் அட்டூழியம் உச்சகட்டமாக இருக்கிறது.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் தினசரி குடிபோதை ஆசாமிகளால் தகராறுகள் அதிகமாக உள்ளது. சிகரெட் வாங்க வந்த போதை ஆசாமி, 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறை தராததால் கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றுள்ளார்.

நொச்சிபாளையம்
திருப்பூர் நொச்சி பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நொச்சிபாளையம் பிரிவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சிகரெட் விற்பதற்காக பெட்டிக்கடை ஒன்று அமைத்து உள்ளார்.

10மணிக்கு வந்தார்
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் போதை ஆசாமி ஒருவர் வந்து 500 ரூபாய் நோட்டை கொடுத்து பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு உள்ளார். ஆனால் சில்லறை இல்லை என கடையில் வேலை பார்ப்பவர் கூறி உள்ளார்.

ஆத்திரம்
இதையடுத்து போதை ஆசாமி 500 ரூபாய்க்கு 10 பாக்கெட் சிகரெட் கொடு என்று கேட்டு வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மளிகை கடையை பூட்டி விட்டு வந்த செந்தில்குமார் போதை ஆசாமியை பேசி விரட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

கொளுத்திய குடிமகன்
ஆனால் அந்த போதை ஆசாமி ஆத்திரத்தில் அங்கிருந்து செல்லாமல் , பூட்டிய கடையின் ஷட்டரில் தனது வாகனத்தில் இருந்து பெட்ரோல் பிடித்து வந்து ஊற்றி விட்டு, சாவகாசமாக தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

வீடியோ வைரல்
இதையடுத்து அங்கிருந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தப்பியது. போதை ஆசாமி கடைக்கு தீ வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications