திருப்பூரில் கஞ்சா வாங்கிய இளைஞர்கள்..சீ சீ புது ஐட்டமா இருக்கே..பையை திறந்து பார்த்து மிரண்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா வாங்க வந்த இளைஞர்களுக்கு மாட்டுச் சாணத்தை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.. இந்த விவகாரத்தில் கஞ்சா வாங்க வந்தவர்கள் மற்றும விற்றவர்கள் என 4 பேரையும் திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

மதுபானங்களை தாண்டி கஞ்சாவை வாங்கி புகைக்க வேண்டும் சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கஞ்சா விற்பது, வாங்குவது இரண்டுமே தமிழ்நாட்டில் சட்டவிரோதம் ஆகும். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை கூட போலீசார் எடுக்கிறார்கள். அதேபோல் கஞ்சா வியாபாரிகள் மீது குண்டாஸ் உள்பட கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கும் சில நேரங்களில் தொடரப்படுகிறது. ஆனால் கஞ்சா விற்பனை செய்வோர் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.

Ganja dealers cheated youths who came to buy ganja in Tirupur by giving them cow dung

இந்நிலையில் திருப்பூரில் கஞ்சா வாங்க வந்த இளைஞர்களுக்கு மாட்டுச் சாணத்தை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அந்த இளைஞர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். சந்தேகப்படும்படியான செயல்களும் இருந்தது. வாகனத்தை விட்டு இறங்க சொல்லி இருவரையும் தீவிரமாக விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் உண்மை கூறினார்கள்.

அந்த விசாரணையில், இருவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பதும், திருப்பூருக்கு நண்பர்கள் மூலமாக கஞ்சா வாங்க வந்ததாகவும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, வாகனத்திலிருந்த பையைத் திறந்து பார்த்த பொழுது, அதில் கஞ்சாவுக்குப் பதிலாக மாட்டுச் சாணம் இருந்தது.

இதனை பார்த்த வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், எங்கே கஞ்சா விற்கிறார்கள் என்று கேட்டனர்.. அப்போது அவர்கள், திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் கவின் மற்றும் சாரதி ஆகிய இருவரும் தான் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அவர்களிடம் தான் கஞ்சா வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் திருப்பூரைச் சேர்ந்த கவின் மற்றும் சாரதி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் கஞ்சா வாங்க வந்ததற்காகவும், விற்பனை செய்யும் குற்றத்திற்காகவும் திருப்பூர் மத்திய காவல்துறை கவின், சாரதி, லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+