திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்.. அதிகரிக்கும் உள்நாட்டு ஆர்டர்கள்.. ஐரோப்பா ஆர்டர்களும் அதிகரிப்பு
திருப்பூர்: இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகரித்திருக்கிறது. குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகம் வந்த வண்ணம் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் இதுதவிர ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது தொழிலாளர் தேவை திருப்பூரில் அதிகமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்
இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம் ரூ.35 ஆயிரம் கோடிக்கும், வெளிநாட்டு ஆடை வர்த்தகம் ரூ.44 ஆயிரம் கோடிக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் 50சதவீத வரியால் கடந்த ஆக்ஸ்ட் மாத இறுதியில் பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், உள்நாட்டு ஆர்டர்கள் இந்த தீபாவளிக்க சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில் முன்பு வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்குள் அதிகம் இறக்குமதி ஆனது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்குள் விலை குறைவாக வங்கதேச ஆடைகள் அதிக அளவில் விற்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இது பற்றி குஜராத் மற்றும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன்பயனாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தரைவழி ஆடை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது பெருமளவு இறக்குமதி வங்கதேசத்தில் இருந்து குறைந்துவிட்டது.
இதனால் இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகரிக்க தொடங்கிவிட்டது. குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு அதிகமாகவிட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஆர்டர்களை நிறைவேற்ற இன்னும் தொழிலாளர் அதிக அளவில் தேவை என்கிறார்கள். தீபாவளி பண்டிகை மற்றம் பீகார் தேர்தல் உள்ளிட்டவைகளுக்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 சதவீதம் அளவிற்கு திருப்பூருக்கு திரும்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு விரைந்து திரும்ப வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதவிர ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான ஆர்டர்களும் வெளிநாடுகளில் இருந்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. எனினு ம் அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க வரி குறைப்பு தொடர்பான நல்ல தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நிதி ஒதுக்கீடு, வட்டி விகிதம் குறைப்பு, டியூட்டி டிராபேக் சதவீதம் அதிகரிப்பு போன்றவற்றை திருப்பூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்..
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications