Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் திரும்பிய 2020 வரலாறு.. முடங்கிய திருப்பூர்.. உணவு இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : கொரோனா காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் ஊர் திரும்ப வாகன வசதி இல்லாததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் உணவு ஏதுமின்றி அவதிப்படுகிறார்கள்.

Recommended Video

    மீண்டும் திரும்பிய 2020 வரலாறு.. முடங்கிய திருப்பூர்.. உணவு இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தற்போது சரிந்து வருகிறது

    பாதிப்பை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என தமிழக அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் எனவும், கொரோனா தீவிரமானால் முழு ஊரடங்கும் அறிவிக்கப்படலாம் என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஊரடங்கு அச்சம்

    தமிழகத்தில் ஊரடங்கு அச்சம்

    கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கடும் பாதிப்பு ஏற்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உரிய வாகன வசதிகள் இன்றி சாலைகளில் சாரை சாரையாக நடந்து சென்ற காட்சிகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்கியிருந்த இடங்களில் உணவுக்கே வழியின்றி தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பாக ஓரளவுக்கு உதவிகள் கிடைத்தாலும் முழுமையாக ஊரடங்கினை சமாளிக்க முடியவில்லை.

    திருப்பூரில் அவலம்

    திருப்பூரில் அவலம்

    சென்னை கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பானது அதிக அளவில் இருந்தது இந்நிலையில் ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் செல்ல நினைத்து வாகன வசதி இல்லாததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் உண்ண வழியின்றி பட்டினியோடு காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பனியன் தொழில் நகரான திருப்பூர் டாலர் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

    வடமாநில தொழிலாளர்கள் அவதி

    வடமாநில தொழிலாளர்கள் அவதி

    பிகார், ஒடிஸா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாக திருப்பூர் வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் திருப்பூருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊரடங்கு அச்சம் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.

    உண்ண உணவின்றி தவிப்பு

    உண்ண உணவின்றி தவிப்பு

    அதேவேளையில் வேலை தேடி திருப்பூர் வருபவர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவ்வாறு வரும் பயணிகள் நேற்று இரவு முதல் பேருந்து வசதிகள் இல்லாததால் ரயில் நிலையத்தின் முன்புறம் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். சிலர் அங்கேயே சமைத்துப் சாப்பிடுகின்றனர். சிலர் உணவு இல்லாமல் உட்கார்ந்திருக்கின்றனர். பெண்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறார்கள்.

    அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    ஊரடங்கு அச்சம் காரணமாக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் வட மாநில தொழிலாளர்களால் நிரம்பி வழிகின்றது. முழு ஊரடங்கு என்ற நிலையில் தாங்கள் வேலை செய்யும் பனியன் நிறுவனங்களுக்கு செல்ல இயலாமல் ரயில் நிலையத்தில் முடங்கி உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+