Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் இருந்துதான் இந்த மோசடி நடந்ததா? சிக்கிய ஆன்லைன் கடன் செயலி மோசடி கும்பல்..பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஆன்லைனில் கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தியும் பணம் வரவில்லை எனக்கூறி பணத்தை திரும்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்த மோசடி கும்பலை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர தேவைகளுக்காக ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிவிட்டு பின்னர் அந்த கடன் நிறுவனங்களின் மோசடி வலையில் சிக்கி கடும் பாடு பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பலரும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகள் வெளிநாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாகவும் வடமாநில கும்பல்கள் கால்சென்டர்கள் வைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மூலம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தனிப்படை அமைத்து விசாரனை

தனிப்படை அமைத்து விசாரனை

திருப்பூர் மாவட்டம் பெருமநல்லூரை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பெண் கொடுத்த தகவலை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்களின் செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தனர்.

3 லேப்டாப்கள், 6 மோடம்கள் பறிமுதல்

3 லேப்டாப்கள், 6 மோடம்கள் பறிமுதல்

இதில் திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் இருந்து கால் சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகம்மது அஸ்கர் ( வயது 24), முகம்மது சலீம் (வயது 37), முகம்மது ஷாபி (வயது 36), அனிஸ்மோன் (வயது 33) அஷ்ரப் (வயது 46) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள் மற்றும் 3 லேப்டாப்கள், 6 மோடம்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆபாசமாக மார்பிங் செய்து

ஆபாசமாக மார்பிங் செய்து

ஸ்பீடு லோன், கேண்டிபே, ஈசி லோன், லக்கி மணி ஆகிய நான்கு வெளிநாட்டு கடன் செயலி மூலம் கடன் வழங்குவதாக கூறி பணம் தேவைப்படுபவர்களிடம் ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றை வாங்கியிருக்கின்றனர். பணம் தேவைப்படுபவர்களும் இவர்கள் மோசடி கும்பல் எனத்தெரியாமல் ஆவணங்களை கொடுத்து பணம் பெற்றுள்ளனர். கடன் பெற்றவர்கள் கடனை முறையாக செலுத்தினாலும் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை என்று கூறி பணத்தை திரும்ப அனுப்ப வேண்டும் இல்லையென்றால் உங்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால்..

தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால்..

இதற்கு பயந்து சிலர் பணத்தை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மிரட்டல் விடுக்கவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில்தான் தனிப்படை அமைத்து இந்தக் கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். இந்தக் கும்பல் தமிழகம் முழுவதும் பலரிடம் பணத்தை பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் கைதான 5 பேர் மீதும் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 1930 என்ற எண்ணில் புகார் கூறலாம்

1930 என்ற எண்ணில் புகார் கூறலாம்

இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி சசாங் கூறுகையில், ''கடன் செயலி மூலம் பொதுமக்களிடம் பணம் பறித்த 5 பேரை கைது செய்துள்ளோம். வெளிநாட்டு கும்பலுக்கு இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம். யாராவது இதுபோன்று போன் செய்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் கூறலாம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+