கொடூரம்! 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்.. திருப்பூர் அருகே பயங்கரம்!
திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடூரச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது பள்ளிச் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்ப்ட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்தனர்.
தேர் திருவிழா முடிந்த அன்று மாலையில் இசை கச்சேரி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் பார்வையாளர்களாகச் சென்ற நிலையில், தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து, அவரது தாய் சிறுமியைத் தேடிய நிலையில், அந்தச் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படட்து தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் தொலைந்த சிறுமியை காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications