பரோட்டா கடையானாலும் சரி, பியூட்டி பார்லரானாலும் சரி.. அராஜகம் செய்றாங்க.. பிரேமலதா பளார்!

திருப்பூரில் திமுகவை கடுமையாக விமர்சித்து பிரேலமதா பிரச்சாரம் செய்தார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: இரட்டை இலைக்கு வாக்களிப்பீங்களா... வாக்களிப்பீங்களா.. வெற்றி பெற வைப்பீங்களா.. என்ற குரலை கேட்டதும் அதிமுகவினர் ஒருகணம் உறைந்துவிட்டனர். அதே மாடுலேஷன்தான்.. அதே பாணிதான்.. ஆனால் இது பிரேமலதா விஜயகாந்த் குரல்!

திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எஸ்எம் ஆனந்தன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியதாவது:

Premalatha slams DMK Party during lok sabha election campaign in Tirupur

பிரதமர் வேட்பாளர்கள் மோடி மற்றும் ராகுல் காந்தி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஏனென்றால், தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என மெகா கூட்டணியே உருவாகி உள்ளது. இந்த கூட்டணி அமையவே கூடாது என்று எதிர்க்கட்சியினர் எவ்வளவோ சூழ்ச்சி செஞ்சாங்க. ஆனால் இது ஒரு வெற்றி கூட்டணி.

நம் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாருமே பக்திமான்கள். பண்புள்ள பணிவாளர்கள். ஆனால் எதிர்க்கட்சியினரோ அப்படி இல்லை. பரோட்டா கடைக்கு போனாலும் சரி, பியூட்டி பார்லருக்கு போனாலும் சரி, அடிச்சிக்கிட்டு அராஜகம்தான் செய்றாங்க.

வெற்றி பெற்று நமது திருப்பூர் தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றியே தீருவோம் என்று நாம் சூளுரை ஏற்க வேண்டும். இந்தக் கூட்டணி என்றைக்குமே தொடரும் கூட்டணி. 2011-ம் ஆண்டு வரலாற்றை மக்களாகிய நீங்கள் திரும்ப கொண்டு வருவீங்களா? இரட்டை இலைக்கு வாக்களிப்பீங்களா... வெற்றி பெற வைப்பீங்களா?" என்று கேட்டார். பிரேமலதா இப்படி கேட்டதும் தொண்டர்களும் உற்சாகமடைந்து பதிலளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+