திருப்பூர் அருகே ஷாக்.. உள்ளூர் வாலிபர்கள் vs வட மாநில இளைஞர்கள் பெரும் அடிதடி.. குடியால் விபரீதம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தமிழக வாலிபர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பல்லடம் அருகே அருள்புரத்தில் குடிபோதையில் வடமாநில இளைஞர் களுக்கும் இடையே பயங்கர மோதல் -மண்டை உடைந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பூர் மாவட்டம் அருள்புரம் அடுத்த சேகராம்பாளையத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் பிரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

குடி போதை கோஷ்டிகள்
நேற்று மாலை 5 மணி அளவில் குமரவேல் குடோனுக்கு அருகில் உள்ள குட்டையில் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மது அருந்துவதற்காக அமர்ந்திருந்த போது அங்கு பணிபுரியும் வடமாநில இளைஞர் களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் மோதலாக மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்
60க்கும் மேற்பட்ட அருள்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் வடமாநில இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் காயமடைந்த கமல சங்கர் என்ற வடமாநில இளைஞர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லீவு விட்டால் போதும் குடிதான்
விடுமுறை நாட்களில் வடமாநில இளைஞர்கள் மது அருந்திவிட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் விடுமுறை நாட்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலீஸ் கண்காணிப்பு
இரு மதுபோதை கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வடமாநில மட்டும் தமிழ்நாடு என்ற பிரிவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது, மோதல் தொடர்ந்து விடக் கூடாது என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications