திருப்பூர் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.. சென்னை தவறுக்கு ட்விஸ்ட்
திருப்பூர்: சென்னை அரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு திருப்பூரில் தேர்வு எழுதிய தேர்வுகளுக்கு பேரிடியாக அமைந்தது. ஏனெனில் அனைவரும் தேர்வழுது முடித்து விட்டார்கள் பேப்பரை ஒப்படைப்பதற்கு வெறும் பத்து நிமிடமே இருந்தது.
டிஎன்பிசி தேர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் கனவாக இருக்கிறது. எப்படியாவது அரசுகளில் சேர வேண்டும் என்று பல லட்சம் இளைஞர்களும் பெண்களும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானவுடன் பலரும் விண்ணப்பம் செய்வார்கள். அப்படி விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வுக்கு ஆண்டு கணக்கில் காத்திருந்து, தேர்வு எழுதும் நாளில் மிகுந்த சிரத்தை எடுத்து தேர்வுக்கு வருகிறார்கள்.
ஆனால் தேர்வு எழுதி முடித்த பின் திடீரென தேர்வு ரத்து என்று வரும் அறிவிப்பு அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விடுகிறது. அப்படித்தான் நேற்று தமிழ்நாடு இளைஞர்களுக்கு நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்கள் எப்படி என்பதை தாண்டி , திருப்பூரில் தேர்வு முடிந்த பின்பு தான் தேர்வு ரத்து என்ற விவரமே தெரிய வந்துள்ளது.
தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 பணிகளுக்கும், வணிகவரி உதவியாளர் உள்ளிட்ட குரூப் 2 ஏ பணிகளுக்கும் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில், தேர்வானவர்களுக்கான குரூப் 2ஏ பதவிகளுக்குரிய முதன்மை தேர்வுகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குளறுபடி காரணமாக நேற்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படி என்னதான் குளறுபடி நடந்தது.. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்றனர் . அவர்களில் பலரின் பதிவு எண், அந்த மையத்தில் இல்லாததால் தேர்வர்கள் திடுக்கிட்டு போனார்கள். அதேநேரத்தில், சென்னை நந்தனம் மாநிலக் கல்லூரியில் 821 பேர் தேர்வெழுத இருந்த நிலையில், ஒற்றை இலக்கில் மட்டுமே தேர்வர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், அரும்பாக்கத்தில் தேர்வு எழுதச் சென்றோர், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் அதிரடியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து பேச்சு வார்த்தை நடத்திய டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம், தேர்வை அதிரடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னையில் நடந்த குளறுபடி காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிசி தேர்வுக்கு சரியாக ஹால் டிக்கெட் தேர்வு மையங்களை கூட ஒதுக்க முடியவில்லை என்று பலரும் ஆதங்கத்துடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
என்னுடைய டிஎன்பிசி தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை . இந்த சம்பவம் எதுவுமே தெரியாமல், திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காலையில் நடைபெற்ற முதன்மை எழுத்துத் தோ்வு முழுவதுமாக முடிந்த பின்னரே தோ்வா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.
தோ்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்கு கடைசி 10 நிமிடத்தில் தான், தோ்வு ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் திருப்பூர் தோ்வா்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தோ்வா்கள் கடும் அதிருப்தியடைந்தனா். பல பேரவர்கள் தங்கள் அதிருப்தியை மீடியாக்களிலும் வெளிப்படுத்தினார்கள். திடீரென இப்படி தேர்வு ரத்து செய்தால் நாங்கள் என்ன செய்வது.. இது எங்களுடைய கனவு என்று பலரும் கண்ணீர் மல்க கூறினார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications