திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் கள்ளக்காதலன் மீது மாமியார் "கை" வைத்ததுமே.. தங்க தாலியை கழட்டி வீசிய பெண்
திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பட்டப்பகலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. தேனியில் மனைவியை காணோம் என்று கணவரும், மாமியாரும் தேடி கொண்டிருந்ததால், இப்படியொரு காரியத்தை செய்துள்ளார் அந்த இளம்பெண்.. இது தொடர்பான விசாரணையை திருப்பூர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், பஸ் ஸ்டாண்டில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்து அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரின் இளம் மனைவி, திடீரென ஒருநாள் குழந்தையுடன் காணாமல் போய்விட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், தன்னுடைய மனைவியை பல இடங்களில் தேடி வந்தார்.. அதேபோல, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும், தொடர்ந்து தேடி வந்தனர்.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு
இந்நிலையில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், அந்த இளம்பெண் , குழந்தையுடன் சுற்றி திரிந்து கொண்டிருப்பதாக மாமியார் குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.. உடனே இந்த தகவல் பெண்ணின் குடும்பத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பெண்ணின் மாமியாரும், அம்மாவும் சேர்ந்து திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பதறி ஓடிவந்தனர்.. அங்கு பஸ் ஸ்டாண்டு முழுக்க தேடிப் பார்த்தபோது, இளைஞர் ஒருவருடன் அந்த பெண் இருந்தது தெரியவந்தது..
அந்த இளைஞர்தான், பெண்ணை கடத்தி வந்ததை அறிந்து, அம்மாவும், மாமியாரும் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்கினார்கள்.. மேலும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியேயுள்ள புற காவல் நிலையத்தில் அந்த இளைஞரை இழுத்து சென்று இருவரும் ஒப்படைத்தனர்..
தாலியை கழட்டிய பெண்
அப்போது திடீரென குறுக்கிட்ட இளம்பெண், எனக்கு என்னுடைய கணவரை பிடிக்கவில்லை, நாங்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வந்தோம்.. என் காதலன் மீது யாரும் கை வைக்காதீங்க, இந்தாங்க உங்க மகன் கட்டின தாலி என்று சொல்லி, கழுத்தில் இருந்த தங்க தாலிச்சரடை கழட்டி மாமியாரிடம் வீசினார் இளம்பெண்.. அத்துடன், என்னுடைய குழந்தையை என்கிட்ட தந்துட்டு போங்க என்றும் கறாராக சொன்னார்..
இதைக்கேட்டு மாமியார், அம்மா என ஒட்டுமொத்த பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கள்ளக்காதலனுக்காக சப்போர்ட் - வீடியோ
அடுத்தவர் மனைவியை கடத்தி வந்த இளைஞரை மாமியார் சரமாரியாக தாக்கியதும், உடனே கள்ளக்காதலனுக்காக பரிந்துபேசி, கழுத்திலிருந்த தாலியை கழட்டி மாமியாரிடமே இளம்பெண் வீசியதும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், மருமகளின் கள்ளக்காதலனின் சட்டையை இழுத்து பிடித்து தாக்குகிறார் மாமியார்.. அப்போது குறுக்கிட்ட மருமகள், கள்ளக்காதலனை அடிக்க வேண்டாம் என்று தடுத்துக்கொண்டே, தாலியை கழட்டி மாமியாரிடம் வீசி வாக்குவாதமும் செய்கிறார். இதை அங்கிருந்த பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications