வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தோழிகளுடன் தகராறு! விபரீத முடிவு எடுத்த கீர்த்தனா! உயிர்போன சோகம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாட்ஸ் அப் 'ஸ்டேட்டஸ்' வைப்பதில் தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது உறவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (17).
கீர்த்தனா உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுப்பு என்பதால் அவர் டைப்ரைட்டிங் கற்று வந்தார்.

உறவினரிடம் செல்போனில் பேச்சு
இவரது வீட்டு அருகே கிணறு ஒன்று உள்ளது. 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 50 அடிஉயரத்திற்கு தண்ணீர் உள்ளது. நேற்று கிணற்றின் அருகே நின்ற கீர்த்தனா தனது உறவினர் மனோஜ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கண்கலங்கிய நிலையிலும், சோகமாகவும் பேசினார்.

தற்கொலை செய்வதாக...
அப்போது, ‛‛நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன்'' என கூறினார். அதற்கு அவர் ‛‛வேண்டாம். தற்கொலை செய்யாதே'' என கூறியபோதே செல்போனை தரையில் வீசி எறிந்துவிட்டு கிணற்றில் குதித்து விட்டார். செல்போன் ஆப் ஆகாததால் கீர்த்தனா கிணற்றில் விழுத்த சத்தம் மனோஜிக்கு கேட்டது.

கிணற்றில் குதித்து தற்கொலை
இதையடுத்து அவர் சோழமாதேவியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டு கீர்த்தனாவை காப்பாற்ற கூறினார். பிரபாகரன் அங்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும், செல்போன் மட்டுமே கிடந்தது. கிணற்றில் குதித்த கீர்த்தனா தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

உடல் மீட்பு
இதுபற்றி உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி கீர்த்தனாவின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கீர்த்தனாவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

வாட்ஸ்அப் ‛ஸ்டேட்டஸ்’ பிரச்சனை
விசாரணையில் செல்போனில் வாட்ஸ் அப் 'ஸ்டேட்டஸ்' வைப்பது தொடர்பாக தனது தோழிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications