திருப்பூரில் அதிர்ச்சி! பவர் பேங்கால் தாக்கி தீ வைத்த கள்ளக்காதலி.. 50 அடி தூரம் ஓடிய மரக்கடைக்காரர்
திருப்பூர்: மரங்களை ஒப்பந்த அடிப்படையில் வெட்டி, விற்பனை செய்து வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, திருப்பூர் மாவட்ட மக்களை கடந்த 2 நாட்களாகவே அதிர வைத்து வருகிறது. இதையடுத்து மரம் வெட்டும் ஒப்பந்ததாரை வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்து அவரது வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். என்ன நடந்தது திருப்பூர் மாவட்டத்தில்?
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பராஜ்.. அவினாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அரவை ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.. அதே பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 63 வயது சின்னப்பராஜிக்கும், பூமணி என்ற 42 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே தகாத உறவாக மாறியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பூமணி, அவினாசி நடுவச்சேரி பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அங்கேயே வீட்டை வாடகைக்கு எடுத்து தனிமையில் வசித்து வரும்நிலையில்தான் சின்னப்பராஜூடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்
இதையடுத்து இருவருமே தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். ஆனால், சின்னப்பராஜ் மேலும் பல பெண்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம் பூமணிக்கு தெரிந்து , சின்னப்பராஜை கண்டித்துள்ளார்.. எனினும் சின்னப்பராஜ் தன்னுடைய பழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை என தெரிகிறது.
இதனால் பூமணிக்கும், சின்னப்பராஜூக்கும் அடிக்கடி தகராறு, சண்டைகள் வெடித்த வண்ணம் இருந்தன.. ஒருகட்டத்துக்கு மேல் சின்னப்பராஜின் அட்டகாசத்தை பொறுத்து கொள்ள முடியாத பூமணி, அவரை கொன்றுவிட முடிவு செய்தார்.
இதற்காக நேற்று முன்தினம் இரவு, உல்லாசமாக இருக்கலாம் என சொல்லி சின்னப்பராஜை அவிநாசி சின்னேரி பாளையத்துக்கு அழைத்து சென்றுள்ளார் பூமணி.. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற 2 பேரும், சாலையோர தடுப்புச்சுவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு மது அருந்தியிருக்கிறார்கள்.
அப்போது பல பெண்களுடன் பழகுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று பூமணி சொல்லவும், மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது..
செல்போன் பவர் பேங்க்
இதனால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பூமணி, கையோடு கொண்டு வந்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னப்ப ராஜின் தலையில் கடுமையாக தாக்கவும், வலி தாங்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார் சின்னப்பராஜ்.
பிறகு, கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சின்னப்பராஜ் மீது ஊற்றி , தீ வைத்துள்ளார்.. இதில் உடல் பாதி எரிந்த நிலையில், ரோட்டோரம் விழுந்து உயிரிழந்துவிட்டார் சின்னப்பராஜ்..
பிறகு பூமணி விடிகாலை அவினாசி போலீஸில் சென்று சரணடைந்ததுடன், நடந்த விவரங்களை வாக்குமூலமாக சொன்னார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயில் கருகிய சின்னப்பராஜின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பூமணியிடமும் விசாரணையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
பூமணியின் கணவர்
சொந்தமாக மரக்கடை வைத்திருந்த சின்னப்பராஜின் 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் இருவருமே வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்..
அதேபோல கொலை செய்த பூமணிக்கும் திருமணமாகி விட்டது.. பூமணியின் கணவர் பெயர் கனகராஜ்.. சின்னப்பராஜூக்கு முதலில் பழக்கமானது கனகராஜ்தானாம்.. ஆனால், கனகராஜ் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. இதனால் பூமணியுடனான உறவு சின்னப்பராஜுக்கு தொடர்ந்துள்ளது..
ஆனால், பல பெண்களுடனும் சின்னப்பராஜுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததுமே பூமணி கொந்தளித்துள்ளார்.. இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு அதிகரித்து வரவும்தான், பிறகு சின்னப்பராஜ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பூமணியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
50 அடி தூரம்
சம்பவத்தன்றுகூட, தன்னுடைய மரக்கடையில் பூமணியை சரமாரியாக தாக்கியுள்ளார் சின்னப்பராஜ். இதனால்தான் ஆத்திரம் அதிகமாகி அவரை கொலைவெறியுடன் பவர் பேங்க்கில் தாக்கியிருக்கிறார்.. தலையிலிருந்து சின்னப்பராஜூக்கு ரத்தம் சொட்ட சொட்ட வழியவும், அங்கிருந்த ஓடைக்குள் தள்ளிவிட்டுள்ளார் பூமணி.
தலையில் அடிபட்டு, பலத்த காயத்துடன் சின்னப்பராஜ் மயங்கி விழுந்த நேரத்தில் பெட்ரோலை எடுத்து சின்னப்பராஜ் உடல்மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.. தீக்காயம் உடலில் பட்டதுமே வலியால் அலறியபடி அங்கிருந்து சுமார் 50 அடி தூரத்துக்கு உயிருடன் ஓடியிருக்கிறார் சின்னப்பராஜ்.. ஆனால் அதற்கு மேல் அவரால் ஓட முடியாமல் சாலையோரமே சுருண்டு விழுந்து, உடல் கருகி இறந்துள்ளார்...!!!












Click it and Unblock the Notifications