கல்யாணம் ஆன ஒன்றரை வருசம்.. கசந்த காதல்.. கழுத்தை நெரித்த காதலன்.. துடிதுடித்து இறந்த இளம்பெண்
திருப்பூர்: குடும்ப பிரச்னையில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், இந்த சம்பவம் தொடர்பாகவும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை, காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

கதவு திறக்கவில்லை
சமீபத்தில், பாண்டியன் நகர், பண்ணாரியம்மன் நகரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம், வெளியே சென்று விட்டு தம்பதியர் வீட்டுக்கு திரும்பினர்.வெகு நேரமாக வீட்டு கதவு திறக்காத காரணத்தால், அக்கம்பக்கத்தினர் வீட்டை சென்று பார்த்தனர். வீட்டுக்குள் வைஷ்ணவி இறந்து கிடந்தார்.

தலைமறைவு
இதுகுறித்து தகவலின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அருண்குமார் வைஷ்ணவி, தம்பதியர் மத்தியில், அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. அதேநேரத்தில், மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, சொந்த ஊருக்கு அருண்குமார் சென்று விடுவது வழக்கம். மீண்டும் பிரச்னை ஏற்பட, மனைவி கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி சென்றார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

காஞ்சிபுரம்
மற்றொரு குற்ற சம்பவம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் மதுபானக் கடையின் இரண்டு விற்பனையாளர்களில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார், மற்றொரு விற்பனையாளர் படுகாயத்துடன் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுபானக்கடை
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இதன் மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் விற்பனையாளர்களாக வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் வயது 43 , கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராமு (வயது 34)என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

கடுமையாக தாக்கினர்
எப்போதும் போல் நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் ஆகிய இருவரும் கடையின் பின்புறம் உள்ள மதுபானக் கூடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை எடுப்பதற்காக வந்துபோது அங்கு மறைந்திருந்த சில மர்ம நபர்கள் துளசிதாஸை கத்தியால் கடுமையாக தாக்கினர். இதை தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராமுவையும் கத்தியால் குத்தி உள்ளனர்.

தனிப்படை தேடுதல்
மார்பு அருகே கத்தியால் குத்தப்பட்ட துளசிதாஸ் மிகுதியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் படுகாயத்துடன் போராடிக்கொண்டிருந்த ராமுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த துளசிதாசன் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். சம்பவ இடத்திற்கு திருப்பெரும்புதூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்தார். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications