மணி அண்ணன்கள்.. இப்போ ‘நோ மணி’.. '65000 கோடி' செந்தில்பாலாஜியே முடிச்சு விட்ருவாரு - தினகரன் கிண்டல்!
திருப்பூர் : அதிமுக ஆட்சி காலத்திலேயே மணி அண்ணன்களிடம் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. இப்போது ரெய்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது குறித்துப் பேசியுள்ள தினகரன், வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ 'நோ' மணி ஆகிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.
மேலும், மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும் என்றும் திமுகவை செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

செந்தில் பாலாஜியே முடிச்சிடுவாரு
திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுகவை செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார். மீண்டும் திமுக ஆட்சி கவிழ்வதற்கு மின் கட்டண உயர்வு போதும்.

மின் கட்டண உயர்வு
கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்கக் கூடாது. துன்பப்படுத்துவதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடல் என்பதை திமுக நிருபித்து வருகின்றது" என விமர்சித்தார்.

அப்போ திருந்தல.. அனுபவிக்கிறாங்க
மேலும் பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி ஸ்டாலினையே பொதுச்செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆட்சிக் காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலைக் கண்டித்தேன். அவர்கள் திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். விலைபோகாத சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர்.

நோ ‘மணி’ ஆன மணிகள்
கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என்றார்கள். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது? மணி அண்ணன்களிடம் அப்போதே சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. இப்போது ரெய்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். வேலுமணி, தங்கமணியெல்லாம் இப்போ 'நோ' மணி ஆகிவிட்டனர். 1988 ஆம் ஆண்டு என் 26 வய்திலேயே கருணாநிதியை எதிர்கொண்டவன் நான். இந்த எடப்பாடி எல்லாம் எம்மாந்திரம்?

65,000 கோடி
ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையாததற்கு பழனிசாமியே நூறு சதவீதம் காரணம். ஜெயலலிதா சாதி பேதம் இன்றி வழிநடத்திய கட்சியை வட்டார கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக வென்ற 65 தொகுதி என்பது 65,000 கோடி ருபாய் உழைப்பு. நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும். " எனத் தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications