அந்த "மாமா" தான் காரணம்.. வெடித்து கதறிய 15 வயது பிஞ்சு.. அதிர்ந்து போன திருப்பூர்.. என்னாச்சு?
திருப்பூரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைதானார்
திருப்பூர்: மீண்டும் ஒரு போக்சோ கொடுமை திருப்பூரில் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட காம மிருகத்தை போலீசார் பிடித்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்து வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்..
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இந்த குற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.

போக்சோ
இந்த போக்சோ சட்டத்தின்கீழ் கைதானால், கடும் தண்டனை கிடைக்கும் என்ற போதிலும், பாலியல் சம்பவங்கள் இன்னும் குறையாமலேயே தொடர்கிறது. போக்சோவில் கைதானாலும், குற்றவாளிகள் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.. அப்படியானால் போக்சோவைவிட தீவிரமான, கடுமையான சட்டங்களே அதிகம் தேவை என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.. பாலியல் குற்றங்களுக்கு தரப்படும் தண்டனையானது, இனி அத்தகைய குற்றங்களை செய்ய யாருமே துணியகூடாது என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

திருப்பூர்
இப்போதும் ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.. இவரையும் போலீசார் போக்சோவில்தான் கைது செய்துள்ளனர். ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி பூசாரி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நாகமணி.. 50 வயதாகிறது.. திருமணமாகி 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இதில், ஒருவருக்கு திருமணமாகிவிட்டது.. 2வது மகளுக்கு 15 வயதாகிறது.. இவர் சமீபகாலமாகவே, அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்துள்ளார். இதை சிறுமியின் அம்மா நாகமணியும், அக்காவும் பார்த்துவிட்டு விசாரித்துள்ளனர்.

போனில் யாரு
அப்போதுதான் போனில் பேசியது, அக்கா கணவர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.. அவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பாஸ்கர் சிறுமியை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இந்த விஷயத்தை வெளியே சொன்னால், அக்காவை வாழாவெட்டியாக வீட்டிற்கு அனுப்பிவிடுவதாக பாஸ்கர் மிரட்டினாராம்.. அந்த மிரட்டலுக்கு பயந்து, மாமா சொல்வது போலவே நடந்து கொண்டுள்ளார்.. இந்த பயத்தை பலமுறை, பாஸ்கர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

கைது
இதையெல்லாம் சொல்லி சிறுமி அழுததையடுத்து, நாகமணியும், அக்காவும் அதிர்ந்தனர்.. உடனடியாக நாகமணி காங்கயம் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்போரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications