திருப்பூரில் தனிமை தேடி.. 22 வயது இளைஞருடன் காட்டுப்பகுதியில் ஒதுங்கிய 33 வயது பெண்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை மிரட்டி நகை பறித்திருக்கிறது மர்ம கும்பல். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

திருப்பூர் மாநகரத்தில் பல ஆயிரம் பனியன் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு லட்சக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். திருப்பூர் மாஸ்கோ நகரில் 33 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

What happened to 33-year-old woman who went to the forest with a 22-year-old man in Tirupur?

மங்கலம் ரோடு கே.வி.ஆர்.நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒரு பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த அந்த இளைஞருக்கும், மாஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே வேலை பார்க்கும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த 4 மாதங்களாக 33 வயது பெண்னுடன் 22 வயது இளைஞர் மோட்டார்சைக்கிளில் வெளியிடங்களுக்கு சென்று காட்டுப்பகுதியில் ஒதுங்கி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படித்தான் சம்பவத்தன்று மாலை தனிமையில் சந்திக்க இடம் தேடி திருப்பூரில் அலைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தனிமையில் சந்தித்து ஜாலியாக இருக்க இடம் கிடைக்கவில்லை.

இனிடையே கணியாம்பூண்டி டாஸ்மாக் கடை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு 33 வயது பெண்னுடன் 22 வயது இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென அங்கு வந்தனர்.

இதை பார்த்து மிரண்டு போன கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் அச்சப்பட்டனர். அப்போது அந்த கும்பல் இருவரையும் மிரட்டி பெண்ணிடம் இருந்து பணத்தை கேட்டு மிரட்டியதுடன், நகைகளை கழட்டி கொடுக்குமாறும் மிரட்டி உள்ளனர். இதில் பயந்து போன அந்த பெண் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்பட 6 பவுன் நகைகளை கழட்டி அந்த கும்பலிடம் கொடுத்தார்.

அதன்பின்னர் அந்த கும்பல் பெண்ணிடம் அத்துமீறவில்லை. அப்படியே நகைகளை மட்டும் வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகினர். இந்த சம்பவத்திற்கு பிறகு கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டு நேராக திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீசார் கள்ளக்காதல் ஜோடியை அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். அது காட்டுப்பகுதி என்பதால் சுற்று வட்டாரத்தில் கண்காணிப்பு கேமரா என்பது அந்த பகுதிகளில் இல்லை. அந்த பெண்ணுக்கு 6 பவுன் நகையை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதேநேரம் போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணுக்கும் இளைஞருக்கும் புத்திமதி கூறினார்கள். முறை தவறிய உறவு தவறு என்கிற நிலையில், காட்டுப்பகுதியில் இப்படி செய்வது பெரிய குற்றங்களுக்கே வழிவகுக்கும் என்றும் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 22 வயது இளைஞருடன் காட்டுப்பகுதியில் ஒதுங்கிய பெண்ணிடம் மர்ம கும்பல் நகையை பறித்துச் சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+