தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் விரட்டியதாக பரவும் வீடியோ! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழக இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக இணையத்தில் வெளியோ ஒன்று பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மையைப் பார்க்கலாம்.

வடமாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பிழைப்பிற்காகத் தமிழ்நாடு வருவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதுபோல வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இருந்த போதிலும் ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கிப் பல பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் வட மாநிலத்தவர் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

 வடமாநிலத்தவர்

வடமாநிலத்தவர்

வடமாநிலங்களைக் காட்டிலும் இங்கு வேலை வாய்ப்பு அதிகம்.. மேலும், அங்குடன் ஒப்பிடுகையில் இங்கு ஊதியமும் அதிகம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். வட இந்தியாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் ரயில்களைப் பார்த்தாலே இந்த நிலை நமக்குப் புரியும். வடமாநிலத்தவர் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பதால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன.

வீடியோ

வீடியோ

இருப்பினும், தேவை அதிகமாக இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் இளைஞர்கள் குறித்து முறையான டேட்டா இல்லாததால்.. இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நடந்த சம்பவம் என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது.

 ஓடஓட விரட்டல்

ஓடஓட விரட்டல்

அதில் வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போல இருந்தது. வழக்கம் போல இந்த என்ன மேட்டர் என்று தெரியாமலேயே பலரும் கொந்தளித்தனர். வடமாநில இளைஞர்களை நோக்கி மோசமான கருத்துகளையும் தெரிவித்தனர். இந்தச் சூழலில் இது எங்கு எப்போது நடந்தது.. அப்போது அங்கு முழுமையாக என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. என் நடந்தது வாங்கப் பார்க்கலாம்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் டீ குடிக்க மாலையில் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் சிலர் பெட்டிக்கடையில் புகைபிடித்ததுள்ளனர். அப்போது அங்கு நான்கு தமிழக இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது வடமாநில இளைஞர் தன் மீது வேண்டுமென்ற சிகரெட் புகையை விட்டதாகத் தமிழக இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

 மதுபோதை

மதுபோதை

மேலும், வடமாநில தொழிலாளி ஒருவரை மதுபோதையில் இருந்த அந்த தமிழக இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற வடமாநில தொழிலாளர்களை இதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களை நோக்கி ஓடி வந்துள்ளனர். அத்தனை பேர் திடீரென வருவதைக் கண்டு அஞ்சி தமிழக இளைஞர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். அன்றைய தினம் இது தான் நடந்துள்ளது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அங்கு வந்துள்ளனர்.

வீடியோ

வீடியோ

போலீசார் வருவதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதேபோல வடமாநில இளைஞர்களும் போலீசாரை கண்டதும் அமைதியாக பணிக்குத் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் போலீசாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்தும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவே இப்போது இணையத்தில் வேறு விதமாகப் பரவி வருவது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+