திருச்சிக்கு நேரமே சரியில்லை.. 17 வயசு பெண்ணை கர்ப்பமாக்கி.. பரிதாப தற்கொலை.. காதலனின் வெறித்தனம்

திருச்சியில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சிக்கு நேரமே சரியில்லை.. அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி கொண்டு விழித்து வருகிறது.. 14 வயசு சிறுமி கொலை விவகாரமே அடங்காத நிலையில், 17 வயது சிறுமியின் தற்கொலை சம்பவம் வெடித்து கிளம்பி உள்ளது.. வீட்டில் யாரும் ஆள் இல்லை என்றாலே, உள்ளே நுழைந்து சிறுமியை பலாத்காரமும் செய்துவிடுவாராம் காதலன் ராம்கி.. கடைசியில் அந்த 17 வயது பெண் கர்ப்பமாகி, தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை நரபலி தந்து பெற்ற தந்தையே கொன்றார்.. 2 நாளைக்கு முன்பு இன்னொரு சிறுமியை ஏன் கொன்றார்கள் என்றே தெரியவில்லை. இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

 17 year old girl commits suicide near trichy

இப்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. தன் உறவினர் ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார்... ராம்கிக்கு 22 வயதாகிறது.

உன்னை தான் கல்யாணம் செய்வேன் என்று சத்தியம் மேல் சத்தியம் செய்து, சிறுமியை நாசம் செய்துவிட்டார்.. சிறுமி வீட்டில் ஆள் இல்லை என்றாலே உள்ளே நுழைந்துவிடுவாராம் ராம்கி.. பலமுறை காதலியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார்... இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்து பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.. 6 மாத கர்ப்பம் என்பதால் ராம்கிக்கே மகளை கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.. அதனால் ராம்கி வீட்டிற்கும் சென்று பேசினர்.. ஆனால், கர்ப்பமான பெண்ணை, தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாது என்று ராம்கி பெற்றோர் சொல்லி விட்டார்களாம்.. அத்துடன் சிறுமியின் பெற்றோரையும் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியான சிறுமி, மணப்பாறை மகளிர் ஸ்டேஷனில் ராம்கி மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராம்கி மீது போலீசார் கடந்த மே மாதம் 29-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவே இல்லை.

இதையும் பார்த்து வெறுத்து போன சிறுமி, ஆத்திரமடைந்து, பெற்றோருடன் மணப்பாறை மகளிர் ஸ்டேஷன் முன்பே அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்... போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ராம்கியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி சொன்னார்கள்... ஆனால், அப்போதும் ராம்கி கைது செய்யப்படவில்லை.. இறுதியில் மனசு உடைந்த சிறுமி தற்கொலையே செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர், பெண் குழந்தைகள் நலன் பாதுகாக்கப்படும் என்றும், யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் தயங்காமல் தெரிவிக்கலாம் என்றும் புதிதாக பொறுப்பேற்ற டிஐஜி ஆனிவிஜயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்... இந்நிலையில், இப்படிப்பட்ட துயர சம்பவங்கள் அதிலும் பெண் சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது திருச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+