கல்வெட்டில் 'மிஸ்' ஆன அமைச்சர் பெயர்.. கோஷ்டி மோதலா? எழுந்த சர்ச்சை! அதிகாரிகள் மீது அதிரடி ஆக்ஷன்!
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் திறக்கப்பட்ட நிலையில், குழாய் திறப்பு குறித்து அமைக்கப்பட்ட கல்வெட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அலட்சியமாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது சொந்த மாவட்டமான திருச்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிக்கான கல்வெட்டில் அவரது பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த குடிநீர் குழாய் திட்டம் பற்றிய கல்வெட்டில் அமைச்சர் கே.என்.நேரு பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் குழாய்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 5-வது வார்டில் கால்நடை சந்தைக்கு அருகே மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைத்தார்.

நேரு ஆதரவாளர்கள் அதிர்ச்சி
இதற்காக நகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சரான கே.என்.நேருவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் அப்பகுதி திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே பகுதியைச் சேர்ந்த இரு அமைச்சர்களில் ஒருவரது பெயர் மட்டும் கல்வெட்டில் இடம்பெற்றதால் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

கல்வெட்டு அகற்றம்
மணப்பாறை நகரப் பகுதி, திமுகவில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ளது. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இந்த கல்வெட்டு பிரச்சனையால் இரு அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கே.என்.நேரு ஆதரவாளர்கள் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் விடுபட மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி, பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஷின் கவனக்குறைவு தான் காரணம் என்று தெரியவந்தது.

அதிரடி நடவடிக்கை
அதைத்தொடர்ந்து, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் நாகப்பட்டினத்துக்கும், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் ராஜேஷ் திருத்துறைப்பூண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த கல்வெட்டு உடனடியாக அகற்றப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு பெயரையும் இடம்பெறச் செய்து மீண்டும் கல்வெட்டு வைக்கப்படும் எனத் தெரிகிறது.
-
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications