திருச்சியை அதிரவைத்த சம்பவம்.. மலிவு விலை தங்கக்கட்டி, அரசு அதிகாரி என்று கூறி 40 லட்சம் மோசடி
திருச்சி: திருச்சியில் மலிவு விலையில் தங்கக் கட்டி வாங்கித் தருவதாகவும், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரி என்று கூறி பிரபல நகை கடை இயக்குநரிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (38). இவர் பிரபலமான தனியார் நகைக் கடை ஒன்றில் இயக்குநகராகப் பணியாற்றி வருகிறார். இவர் பூக்கடை காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னிடம் வருமான வரித் துறை அதிகாரி, ஜிஎஸ்டி அதிகாரி என்று கூறி இருவர் பழக்கமாகினர்.

அவர்கள் இருவரும் குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், ரூ. 40 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரவீன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த குரு சம்பத்குமார் என்பவர் ஜிஎஸ்டி அதிகாரி என்று கூறி பிரவீனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அவர் மூலமாக வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி லட்சுமி நாராயணன் என்பவரும் பின்னர் அறிமுகமாகியுள்ளார். அரசு அதிகாரிகளான தங்களுக்கு சந்தை விலையில் தங்க பிஸ்கெட்டுகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சிலரைத் தெரியும். உங்களுக்கு குறைந்த விலையில் வாங்கித் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனை பிரவீனும் நம்பியுள்ளார்.
இதையடுத்து, சென்னை பூக்கடை பகுதியில் உள்ள அவரது நிறுவனத்தில் வைத்து அவர்களிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார். இந்நிலையில், 40 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிச் சென்ற இருவரும் அதன் பிறகு பிரவீனை தொடர்பு கொள்ளாமலேயே இருந்துள்ளனர். செல்போனில் அழைத்தாலும் அழைப்பை எடுக்காமல் துண்டித்து வந்துள்ளனர்.
தங்கக் கட்டிகளையும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இதையடுத்து, பிரவீன் நேரடியாகச் சென்று அவர்களிடம் கேட்டபோது குரு சம்பத்குமாரும், லட்சுமி நாராயணனும் பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தான் பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரவீன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள் இல்லை என்பதும், பண மோசடி செய்வதற்காக தங்களை அரசு அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு பல பேரிடம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
போலி அரசு லட்சிணை, அரசு பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தி இதே பாணியில் அரசு அதிகாரிகள் என்று கூறி பலரிடம் இதே பாணியில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, போலீஸார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications