சைக்கிள் வாங்க தாத்தா கொடுத்த ரூ.10,000... கொரோனா நிவாரண நிதியாக அளித்த சிறுவன்
திருச்சி: திருச்சி காட்டூரில் பிறந்தநாள் பரிசாக சைக்கிள் வாங்குவதற்கு தாத்தா கொடுத்த ரூ.10,000-ஐ கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளான் சிறுவன் விஜேஷ் ராம்.
உலகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனாவில் இருந்து பொதுமக்களை காக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியோருக்கு நிவாரண உதவி வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி மாத ஊதியம் பெறுவோர் வரை தங்களால் முடிந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காட்டூரை சேர்ந்த 8-ம் வகுப்பு சிறுவன் விஜேஷ்ராம், தனது பிறந்தநாளுக்காக சைக்கிள் வாங்கிக்கொள்ளும் படி தாத்தா கொடுத்த ரூ.10,000 பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினான். சிறுவனின் இந்த பெருந்தன்மையை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அந்த நிதியை பெற்றுக்கொண்டார்.

சிறுவன் விஜேஷ்ராமை போலவே திருச்சி மன்னா் மெமோரியல் பள்ளியைச் சோ்ந்த முதலாம் வகுப்பு மாணவி ஆராதனா, தனது சிறுசேமிப்பு நிதியான ரூ.575-ஐ மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினாா். மேலும், அதே பள்ளியைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி சாதனா, தனது சேமிப்பு நிதியான ரூ.677-ஐ கொரோனா நிவாரண நிதியாக கொடுத்தார்.
இதுவரை திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.87 லட்சம் வந்துள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களின் பங்களிப்பை செலுத்த ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications