அதிமுக சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.. டிடிவி தினகரன் விமர்சனம்
திருச்சி: அதிமுகவை பொறுத்த வரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல்பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய இன்று வந்தனர்.
தரிசனத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். ரெங்கா கோபுரம் வழியாக சென்று கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் ஆகிய சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்கு பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

குரங்கு கையில் கிடைத்த பூமாலை
அதிமுக அலுவலகத்தில் கேலிக்கூத்து நடந்து வருகிறது. மேலும் அதிமுகவை பொறுத்த வரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என்கிற நிலை தான். நீங்களே தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை விருப்ப மனு கொடுக்க வந்த போது விரட்டியதை நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்சினையை திசைத் திருப்பப் பார்க்கிறார்கள் என்றார்

சசிகலாவுடன் தினகரனுக்கு மோதல்?
உட்கட்சி பூசல் மற்றும் கூச்சலை சரி செய்யவே அதிமுக நிர்வாகிகளுக்கு நேரம் சரியாக உள்ளது. இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது என்றார். எனக்கும் சசிகலாவிற்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் கருத்துக்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை அரசியல் விமர்சகர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

திமுகவின் சுயரூபம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழக முதல்வராக வந்த உடனே நீட் தேரவு ரத்து என்பதை ஒரே கையெழுத்தில் முடித்து விடுவேன் என்று கூறினார்? அதேபோல் சிறுபான்மையின மக்களின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு திமுக 7 பேர் விடுதலையில் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். திமுகவின் சுய ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ்-இபிஎஸ்ஐ இயக்குவது யார்?
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அவர்களை வேறு யாரும் இயக்குகிறார்களா என்கிற கேள்விக்கு காலம் அதனை உங்களுக்கு விளக்கும். எங்களுடைய இலக்கு அம்மாவுடைய கட்சியை மீட்டெடுப்பதே என தெரிவித்தார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications