சுருக்கு பையை திருட முயன்ற நபர்.. துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பாட்டி.. தலைதெறிக்க ஓட்டம்!
திருச்சி: தன்னிடம் இருந்த சுருக்கு பையை திருட முயன்றவரை மூதாட்டி ஒருவர் துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. திருச்சியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவெறும்பூர்.
இந்த பகுதிகளில் உள்ள கடைகள் இரவு பூட்டிய பின்பு அதன் முன்பு தங்களுக்கென வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றோர்கள் என ஏராளமானோர் தங்கி இருந்து இரவு நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு மூதாட்டி ஒருவர் இரவு நேரத்தில் தூங்கி வந்தார்.

மர்ம நபர் வந்தார்
சில நாட்களுக்கு முன்பு அந்த மூதாட்டி வழக்கம்போல் கடையின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்,. அந்த மூதாட்டி சிறதளவு பணம் வைத்திருந்த சுருக்கு பையை தன்னிடம் வைத்திருந்தார். அந்த வழியாக வந்த ஒரு நபர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் சுருக்கு பை இருப்பதை கண்டார். இந்த சுருக்கு பையை திருடிச்செல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.

சுருக்கு பை
இதனால் நீண்ட நேரமாக அங்கு நின்று யாரும் வருகிறார்களா? என்று நோட்டமிட்ட அந்த நபர் தன் மீது சந்தேம் வராமல் இருக்க போன் பேசுவது போல செல்போனை காதில் வைத்துக் கொண்டு நின்றார். இதனை தொடர்ந்து அவர் எந்த சத்தமும் இன்றி மூதாட்டியின் காலுக்கு பக்கத்திக் நைசாக அமர்ந்துள்ளார். மூதாட்டி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்த அவர் பின்னர் மூதாட்டியின் போர்வையை விலக்கி, அங்கு இருந்த சுருக்கு பையை மெதுவாக தூக்கியுள்ளார்.

சுதாரித்த மூதாட்டி
''என்ன.. ஏதோ ஒன்று காலில்ஊர்வதைப் போல இருக்கிறதே'' என்று திடுக்கிட்டு மூதாட்டி எழுந்தபோது அருகில் ஒரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய சுருக்கு பையைதான் அந்த நபர் திருட வந்துள்ளார் என்று அவர் சுதாரித்துக் கொண்டார். மூதாட்டி எழுந்தவுடன் அந்த நபர் நைசாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றார். உடனே மூதாட்டி சுதாரித்துக் கொண்டு அருகில் கிடந்த துடைப்பத்தை கையில் எடுத்தார்.

வெளுத்து வாங்கினார்
தனது செருப்பை போட்டுக்கொண்டு அந்த நபர் தப்பிக்க முயன்றபோது, அதிவேகமாக செயல்பட்ட மூதாட்டி தான் வைத்திருந்த துடைப்பத்தால் அந்த நபரை சரமாரியாக தாக்கி வெளுத்து வாங்கினார். மூதாட்டியிடம் இருந்து தப்பியோட முடியாமல் தவித்த அந்த திருடன் துடைப்ப அடியை தாங்க முடியாமல் விழி பிதுங்கினார். பின்னர் அவரிடம் இருந்து தப்பி 'துண்டை காணோம், துணியை காணோம்' என்று அங்கு இருந்து தலைதெறிக்க ஓடினார்.

வீடியோ வைரல்
அந்த நபர் மூதாட்டியிடம் திருட முயல்வதும், மூதாட்டி அவரை துடைப்பத்தால் வெளுத்து வாங்குவதும் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணிச்சலுடன் துடைப்பத்தால் திருடனை அடித்து விரட்டிய மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து
மூதாட்டியை போல் மற்ற பெண்களும், திருடர்கள், தங்களிடம் தவறாக நடக்க முயல்பவர்களை இவ்வாறு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியிடம் இருந்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மிகவும் விழிப்புடன் இருந்த மூதாட்டி தனது சுருக்கு பையை காப்பாற்றியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications