பாருங்க.. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் ஜெயிக்கும்- திருச்சியில் மோடி சகோதரர் பேட்டி
திருச்சி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள, லோக்சபா தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி திருச்சியில் தெரிவித்தார்.
பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கத்தின், அகில இந்தியத் தலைவராக உள்ளவர், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி.

நரேந்திர மோடிசெயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க விழா நேற்று திருச்சியில் நடந்தது. இந்த விழாவிற்கு மாநில தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி்ன்னதுரை முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பிரகலாத் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகள் மக்களை சென்றடையவிடுவதில்லை. எனவே தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடையும் வகையில் பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தில் 25 லட்சம் போ் இணைந்துள்ளனா். இதன் மூலம் நாடு முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கப்படும்.
நமது நாட்டில் ஏழை தாய்மார்கள் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது அடையும் சிரமங்களை கண்ட பிரதமர் மோடி இலவச எரிவாயு இணைப்புதிட்டத்தை கொண்டு வந்து ஒரு கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கி இருக்கிறார். மேலும் 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. அதே போல் ஏழை மக்கள் வங்கி கணக்கு தொடங்குவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படுவதன் மூலம், வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக 400- க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக இந்த இயக்கம் தொடா்ந்து பாடுபடும் இவ்வாறு அவர் பேசினர்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பிரகலாத் மோடி கூறியது:
எத்தனையோ நல்ல பல திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. அவற்றை கொண்டு சோ்ப்பதுடன், தொண்டா்களை உற்சாகப்படுத்தவும் இந்த சந்திப்பு உதவும். இதற்காக யாரிடமும் நிதியோ, கட்டாயத் தொகையோ ஏதும் வசூலிக்கவில்லை. இந்த இயக்கம் நாடு முழுவதும் களமிறங்கி, 25 கோடி பேரை இணைக்கும் வகையில் செயலாற்றும் இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பிரசார இயக்கத்தின் தேசிய அமைப்பாளா் ஜெய்கோஷ், மாநிலத் தலைவா் ராஜாராமன், மாநிலத் துணைத் தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் விஜய், மாநில ஒருங்கிணைப்பாளா் சின்னதுரை, திருச்சி மாவட்டத் தலைவா்கள் சுப்பிரமணி, ஐசக்அருள்ராஜ் மற்றும் திருச்சி மண்டல அனைத்து மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications