சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்!
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் இலவசங்கள் குறித்து விவாதம் அரசியல் கட்சியினரிடையே தொடங்கியுள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, இலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்று பேசி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதி அளிப்பதை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக்கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சீமான் பேச்சு
தொடர்ந்து இலவசங்கள் குறித்த விவாதம் நாளுக்கு நாள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவசங்களால் நாடு பாதிப்படைகிறது என்ற விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா. இலவசம் கொடுப்பதால் இழக்கும் பணத்தினை எங்கிருந்து மீண்டும் பெறுகிறீர்கள்.

இலவசம் பற்றி விவாதம்
மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. மாநில அரசு ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது. அப்போது ஏன் வெற்று அறிவிப்புகள் கொடுக்க வேண்டும். என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் தான். இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். அடிப்படைத் தேவைகளை கூட மக்களால் நிறைவேற்ற முடியாமல் வைத்திருந்து, அந்த பொருட்களை இலவசமாக வழங்குவதை எப்படி சாதனைகளாக கருத முடியும். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது.

பாஜக மீது விமர்சனம்
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ். சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார்.

சாவர்க்கர் யார்?
அவரோடு ஆங்கிலேயர்களுக்கு சாகும் வரை விஸ்வாசமாக இருப்பேன் என கடிதம் எழுதிய சாவர்க்கரையும் பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம். அது எப்படி சரியாகும். இப்படி தான் பாஜகவினர் வரலாற்றை திரித்து வருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள். வீர சாவர்க்கர் அல்ல கோழை சாவர்க்கர் என்று விமர்சித்தார்.
-
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications