ஒரு பேனருக்கு போரா? திருச்சி அக்கப்போர்.. விஜயபாஸ்கரால் கோபமான KN நேரு! தூக்கியடிக்கப்பட்ட ஆபிசர்!
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கரின் பிளக்ஸ் பேனர்களை கண்டு அமைச்சர் கேஎன் நேரு, கோபமடைந்ததாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் இடத்தில் பொறுப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.

அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் விளம்பர செலவுக்காக பல்வேறு நபர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் காவேரி மருத்துவமனை உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்திருந்தனர்.
விஜயபாஸ்கர்: அந்த வகையில் முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு தனது சி.விஜயபாஸ்கர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் நன்கொடை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சியில் பல்வேறு பகுதிகளிலும் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழியில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை எடுத்து பரவ விட்டனர்.
கேஎன் நேரு: இந்த நிலையில் இந்த தகவல் குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் மூத்த திமுக நிர்வாகியுமான கேஎன் நேருவுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை ஏன் வைத்தீர்கள்? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர்.
பேனர்கள் அகற்றம்: அவரை சமாதானம் செய்த நிலையில் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சிலர் பேனர்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்தும், சாய்த்தும் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு போட்டி நடைபெற்றது. திமுக ஆட்சி நடக்கும் நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரின் பேனர்கள் திருச்சியில் வைக்கப்பட்டிருந்தது திமுகவினரை கோபத்தில் உள்ளாக்கியதோடு அதிமுகவினரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
அலுவலர் சஸ்பெண்ட்: போட்டி நடக்கும் நிலையில் அங்கு இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரது ஆதரவாளர்களோ கட்சி சார்பாக பேனர்கள் வைக்கவில்லை. இதனால் திமுகவினரையும் அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சியில் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது அவர்களும் அதையே கூறினர். ஆனால் வெளிப்படையாக அது காரணமாக காட்டப்படவில்லை என்கின்றனர்.
அதிர்ச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவத்தின் காரணமாகமே திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக விளையாட்டு ஆணைய விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு பேனருக்கு போரா என கூறி வருகின்றனர் திருச்சி மாவட்ட அதிமுகவினர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications