வெட்கததை விட்டு சொல்கிறேன்.. தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்- அமைச்சர் நேரு
திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசுகையில், வெட்கத்தை விட்டு சொல்கிறேன்-தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள். பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.
அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அண்ணன் தம்பி
அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சி மாதிரி. முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருகிறாரா என்பது நாளைதான் தெரியும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு பேசியதில் இரு விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. ஒன்று தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சி அமைந்தவுடன் பெரும்பாலான அரசு அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்தார். இந்த மாற்றம் அவ்வப்போது நடைபெறுகிறது. அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக அரசுக்கு தோதுவான அதிகாரிகளையே முதல்வர் ஸ்டாலின் நியமித்ததாக சொல்லப்பட்டது. அப்படியிருக்கும் போது கே. என். நேரு இப்படி சொல்கிறார்.

ஒற்றை தலைமை
அது போல் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை பாஜக விரும்பவில்லை என விமர்சனங்கள் உண்டு. மேலும் ஒன்றிணைந்த அதிமுக இருக்கக் கூடாது என்பதில் அக்கட்சி சதி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது கே என் நேருவும் அதே கருத்தை கூறியுள்ளார். மேலும் அதிமுகவும் திமுகவும் அண்ணன் தம்பி கட்சிகள் என்று கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள்
திமுகதான் தங்களுக்கு ஒரே எதிரி என அதிமுக நிர்வாகிகளும், சசிகலாவும் சொல்லி வரும் நிலையில் கே என் நேருவோ அண்ணன் தம்பிகள் என்கிறார். அரசியல் நாகரீகம் என்பது வேறு அமைச்சர் பேசியது வேறு. இரு தரப்பினரும் ஆட்சி, அதிகாரம் என வரும் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்துக் கொண்டால் நலம் விசாரித்து கொள்கிறார்கள். சட்டசபையிலும் சில நேரங்களில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர் நேரு சொன்னது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுக் குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விடிந்தாலே யார் என்ன பிரச்சினையுடன் வருவார்கள் என நினைத்து தூக்கம் வருவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் கே என் நேரு பேசியதற்கு முதல்வரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications