விடுதலைக்காக பட்டினிப் போராட்டம்- எங்களை கண்ணெடுத்து பாருங்க முதல்வரே-திருச்சி முகாம் ஈழத் தமிழர்கள்
திருச்சி: திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 9-வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மனமிறங்கி கேட்டுக்கொள்கிறோம்; எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்கள்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் விசா காலாவதியானது மற்றும் போலி முத்திரையுடன் இந்தியா வந்த இலங்கை, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். 9-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்களாகிய நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக பட்டினியாக இருந்து எங்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா? என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காத்திருக்கிறோம். எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாது தவித்து இருப்போம்.
எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது எத்தனை முறை ஒரு முறையாவது அவர்களை சந்தித்து விட்டு உதவ முடியாது என ஏங்கி இருப்போம். இலங்கையிலே தற்போதைய வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு அத்தனை கோடி மதிப்புள்ள உணவு பொருட்களை அனுப்பி வைத்தீர்கள். நாங்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக எங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மனமிறங்கி கேட்டுக்கொள்கிறோம் எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications