மிதந்த மனித கழிவுகள்.. நள்ளிரவில் நீர்த்தேக்க தொட்டியில் ஏறிய இளைஞர்கள்.. கொடூரம்! அதிர்ந்த திருச்சி
திருச்சி: வேங்கைவயல் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு கொடூரம் திருச்சியில் நடந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய சிலர், மனிதக் கழிவைக் கலந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு:
இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டு விசாரணைக்குப் பிறகு சமீபத்தில் தான் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சிபிஐ குற்றப்பத்திரிக்கை குறித்து ஒரு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
இந்த அதிர்ச்சி முடிவுக்கு வருவதற்குள் மீண்டும் அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. அங்குள்ள காந்தி மார்க்கெட் அருகே 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில் நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. சுமார் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிய சிலர், ஏதோ மர்ம பொருளை உள்ளே வீசியுள்ளனர்.
மனித கழிவுகள்:
இதை அங்குள்ளவர்கள் கவனித்து என்னவென்று பார்த்துள்ளனர். உள்ளே பாலிதின் பை ஒன்று மிதந்த நிலையில், உள்ளே மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தப்படுத்தினர். மேலும், அப்பகுதி முழுக்க பிளீச்சிங் பவுடரும் தூவினர்.
திடீரென இரவு நேரத்தில் வந்து தண்ணீர் தொட்டியில் மனித கழிவை வீசி சென்றவர்கள் யார் ? என்பது குறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் இந்த தொட்டியில் உள்ள தண்ணீர் குடிநீருக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று சொல்லப்படுகிறது.
கஞ்சா நபர்கள்
முதற்கட்ட விசாரணையில் கஞ்சா போதையில் திரிந்த சில நபர்கள் இந்த கொடூரத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications