தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொன்னார்?
திருச்சி : புதுச்சேரி மாநிலத்தைப் போல தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது இதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை தி.நகர் தொடங்கி கன்னியாகுமரி கல்குளம் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தீபாவளி
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில் நிலையம் பேருந்து நிலையம் விமான நிலையம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சனி ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை
அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தைப் போல தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை செல்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து கேட்டனர். தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த விடுமுறை பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இது குறித்து தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் விரைந்து முடிவு எடுத்து அது குறித்து அறிவிப்பார். செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து உரிய அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications